TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதைப் போட்டி – மே 1ம் தேதி நடைபெறுகிறது!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒரு கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. “வெற்றிப் பெருமிதம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கவிதைப் போட்டியை, சிங்கப்பூர் காயல் நல மன்றமும், தமிழ் முரசு நாளிதழும் இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டி வரும் வியாழன், மே மாதம் 1ம் தேதி, காலை 11 மணியளவில் நடைபெறும். போட்டிக்கான இடம் பாலேர் ரோட்டில் (Balestier Road), டேங்க் ரோட்டில் (Tank Road) அமைந்துள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலின் (Sri Thendayuthapani Temple) மண்டபம் 3 ஆகும். முகவரி: 15, Tank Road, Singapore – 238065.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:

  1. ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும். அதுவும் சுயமானதாக இருக்க வேண்டும்.
  2. போட்டியில் வேலை அனுமதி (Work Permit) உடையவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
  3. போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
  4. முன்பதிவுக்கான கடைசி நாள் ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி. அதற்குள் 180 போட்டியாளர்கள் முன்பதிவு முடிந்தவுடன் முன்பதிவு முடித்துக்கொள்ளப்படும்.
  5. போட்டியன்று காலை 10.30 மணிக்கு போட்டியாளர்கள் அனைவரும் அரங்கிற்கு வர வேண்டும்.

பரிசுகள்:

  • முதல் பரிசு: 1,000 வெள்ளி
  • இரண்டாம் பரிசு: 600 வெள்ளி
  • மூன்றாம் பரிசு: 400 வெள்ளி
  • 20 ஊக்கப் பரிசுகள்: தலா 50 வெள்ளி

கவிதைக்கான தலைப்பு: “சுகமான வாழ்வுக்குக் கடின உழைப்பே நம்மை உயர்த்தும்”. இந்த தலைப்பில் மட்டுமே கவிதைகள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்வதற்கும் இரா. புகழேந்தி (98523020) அல்லது ஏ.சி. ஹாஜா நாஜிமுதீன் (97347272) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். பரிசளிப்பு விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். வெளிநாட்டு ஊழியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கவிதைத் திறமையை வெளிப்படுத்தலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

 

Related posts