TamilSaaga

சிங்கப்பூரில் ஒரு ஆணுடன் மல்லுக்கட்டிய இரண்டு பெண்கள்… MRT நிலையத்தில் நடந்த வினோத சம்பவம்!

சிங்கப்பூர் எம் ஆர் டி இணையத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரில் உள்ள பயலே பார் எம் ஆர் டி நிலையத்திற்கு அருகே டிசம்பர் 10ஆம் தேதி இரவு 40 மற்றும் 45 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருவரும் 26 வயது ஆணுடன் மோதிக்கொண்டனர்.

இரு பெண்களும் இணைந்து ஆணை அடிக்கச் சென்ற பொழுது அங்கே இருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் விளக்க முயன்றனர் முதலில் வெளியில் நடந்த சண்டை பிறகு எம் ஆர் டி இளையத்திற்கு உள்ளேயும் தொடர்ந்தது. எனவே எம் ஆர் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் இருவரின் சண்டையும் தொடர்ந்து விலக்கி விடுவதற்காக முயன்றனர். இதை சுற்றி இருந்த பலரும் வீடியோவாக பதிவு செய்தனர். அதனை ஒரு நபர் பேஸ்புக்கில் பகிர்ந்ததால் தற்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை அறிவித்துள்ளது. நம் ஊர்களில் இது போன்ற சண்டை நடைபெறும் என்றாலும் சிங்கப்பூரை பொறுத்தவரை சண்டை என்பது பொதுமக்களுக்கு அரிதான ஒன்றுதான். ஏனென்றால் பொது இடம் என்றாலும் ரயில் மற்றும் பேருந்து என்றாலும் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் அமைதியாக தலை குனிந்து மொபைல் ஃபோனை நோண்டுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருப்பர். அருகில் இருக்கும் நபர்களுடன் பேசுவது கூட பேசுவது கிடையாது. அப்படி இருக்கும் பொழுது வினோதமாக சண்டை நடைபெறும் பொழுது அவர்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியும்.

Related posts