TamilSaaga

Exclusive : அச்சுறுத்தும் பெருந்தொற்று சூழல் : உங்கள் வெளிநாட்டு விமான பயணத்தை இன்சூரன்ஸ் செய்வது லாபமா? நஷ்டமா?

நாம் வாழும் இந்த உலகம் தொழில்நுட்ப ரீதியாக அனுதினமும் வளர்ச்சிபெற்று வரும் ஒவ்வொரு நாளும் நமது பயண முறையும் பல நிலைகளில் உருமாற்றம் பெற்று வருகின்றது என்பது யாராலும் மறக்கமுடியாத மற்றும் மறுக்கமுடியாத உண்மை. அந்த அளவிற்கு மனிதர்கள் இன்று ஓர் இடம் விட்டு இன்னொரு இடத்திற்கு பயணிக்க பலதரப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் அனுதினமும் அறிமுகமாகி வருகின்றது.

இந்நிலையில் இந்த பதிவில், வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களுடைய விமான பயணத்தை இன்சூர் செய்வது அவர்களுக்கு லாபத்தை அளிக்கிறதா? அல்லது மாறாக நஷ்டத்தை அளிக்கிறதா? என்பதை குறித்தே பார்க்கவுள்ளோம். தற்போது உலக அளவில் உள்ள பெருந்தொற்று சூழலில் இந்த இன்சூரன்ஸ் என்பதை பெருந்தொற்றுக்கு முன் மற்றும் பெருந்தொற்றுக்கு பின் என்ற வகையில் பிரிக்கலாம்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் “இந்திய பிரஜை” மீது வழக்கு பதிவு : 2 ஆண்டுகளில் 5 பெண்களுக்கு பாலியல் தொல்லை?

பெருந்தொற்றுக்கு வருவதற்கு முன் உள்ள இன்சூரன்ஸ்

பெருந்தொற்று காலத்திற்கு முன்பு ஒருவர் விமானத்தில் இன்சூரன்ஸ் எடுத்து பயணம் மேற்கொண்டால் பல வகைகளில் அவரால் அந்த இன்சூரன்ஸ் தொகையை கிளைம் செய்ய முடியும். கொண்டு சென்ற லக்கேஜ் தொலைந்துபோகும் பட்சத்தில், பயணம் சென்ற விமானத்திற்கு விபத்து ஏற்படும்பட்சத்தில் மற்றும் முக்கிய வேலைக்காக விமான பயணம் மேற்கொள்ளவிருந்து இறுதி நிமிடத்தில் அந்த விமான சேவை ரத்தாகும் தருணத்தில் நாம் இன்சூரன்ஸ் பணத்தை பெறமுடியும்.

மேலும் அதற்குஏற்ப நாம் முன்கூட்டியே இன்சூரன்சும் செய்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விமான சேவைகளில் இந்த இன்சூரன்ஸ் இருக்காது என்பதும் மாறாக, நட்சத்திர அந்தஸ்துவுடைய விமான சேவைகளில் இந்த இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கரத்தக்கது.

அதுபோன்ற விமான சேவை நிறுவனங்களுடன் பயணிக்கும்போது டிக்கெட் வாங்கும்போதே இன்சூரன்ஸ் செய்திருக்கும் பட்சத்தில் நம்மால் டிக்கெட் விலை மற்றும் கூடுதலாக இன்சூரன்ஸ் பணத்தை பெறமுடியும். மேலும் பட்ஜெட் விமான சேவைகளில் இது கிடைக்காது என்றபோதும் நாம் தனியாக ட்ராவல் இன்சூரன்ஸ் மூலம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்றுக்கு பின் உள்ள இன்சூரன்ஸ்

பெரும்பாலும் இந்த இன்சூரன்ஸ் என்பதை, விமானங்கள் பயணிக்கும் வணிக சம்பந்தமான பயணிகளே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது உண்மை. மேலும் இந்த இன்சூரன்ஸ் பல சராசரி பயணிகளுக்கு பெரிய அளவில் தகவல்கள் தெரிவதில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் தற்போது பெருந்தொற்று ட்ராவல் இன்சூரன்ஸ் என்ற ஒன்றை மக்கள் அதிக அளவில் எடுக்க தொடங்கியுள்ளனர். அதாவது உங்கள் விமான பயணத்தின்போது உங்கள் பயணத்திற்கு முன்னும் பின்னும் நீங்கள் பெருந்தொற்று சோதனை எடுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பட்சத்தில் இந்திய மதிப்பில் 2500 ரூபாய்க்கு பெருந்தொற்று ட்ராவல் இன்சூரன்ஸ் எடுத்துள்ள பட்சத்தில் சிங்கப்பூர் வந்து 30 நாட்களுக்குள் உங்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் 30000 முதல் 50000 டாலர் வரை உங்களால் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியும். பெருந்தொற்று மருத்துவ பரிசோதனைக்கு இது பெரிய அளவில் பயன்படுகின்றது. பல குடும்பங்கள் இந்த வகை இன்சூரன்ஸை பயன்படுத்துகின்றனர்.

அதேபோல இந்த பெருந்தொற்று ட்ராவல் இன்சூரன்ஸ் என்பது எந்தவித விமான சேவை நிறுவனத்திலும் கிடைப்பதில்லை, மாறாக பயணிகள் தனியாக ட்ராவல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இதனை பெறவேண்டும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் இன்சூரன்ஸ் சேவையை பெறுவதும் மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது.

அந்த இன்சூரன்ஸில் குறிப்பிட்டுள்ள வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்புகொண்டாளே உங்களுக்கு எல்லா தகவல்களும் சேவைகளும் உடனடியாக கிடைக்கும். மேலும் நீங்கள் இன்சூரன்ஸ் செய்யும்போது உங்களுடைய தகவல்களை தவறாமல் முழுமையாக கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உங்களால் அந்த இன்சூரன்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆகையால் தற்போது உள்ள சூழலில் இந்த பெருந்தொற்று ட்ராவல் இன்சூரன்ஸ் பெறுவது மிகவும் சிறந்த வழியாக பலரால் பரிந்துரை செய்யப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts