Build To Order அதாவது மக்களின் தேவைக்கு ஏற்ப கட்டப்பட்டு விற்கப்படும் BTO வகை வீடுகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் இந்த வீடுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 2007ம் ஆண்டில் 2.3 விழுக்காடு இருந்த நிலையில், சென்ற 2020ம் ஆண்டில் 5.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதிர்ந்த எஸ்டேட்டுகளில் இந்த சதவிகிதம் என்பது 2.8 விழுக்காட்டில் இருந்து 6.7 விழுக்காடாக மாறியுள்ளது. BTO வகை வீடுகளுக்கு தற்போது சிங்கப்பூர் முழுவதும் பெரிய அளவில் வரவேற்பு பெருகி வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்ட கெய்லாங்கில் உள்ள டகோட்டா ஒன் திட்டத்தையும், வீட்டுவசதி வாரியம் மேற்கோளிட்டுள்ளது. ஒவ்வொரு நான்கு அறைகள் கொண்ட பிளாட்டிற்கு 19 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் போட்டியிடுகின்றனர் என்று கழகம் தெரிவித்துள்ளது.
இந்த முதிர்ச்சியடைந்த எஸ்டேட்டுகளில் புதிய குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது, மேலும் HDP வெளியிட்ட கூற்றுப்படி, இந்த விகிதம் 2017 முதல் 2020 வரை 44 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக வளர்ந்தது எண்டு கூறியுள்ளது.