சிங்கப்பூர் வுட்லேண்ட் பகுதியில் வசித்து வருபவர் 18 வயதான ஜியா யூ. இவர் தற்பொழுது தனது டிக் டாக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளியில் பயின்று வரும் ஜியாவிற்கு முடிக்கப்படாத வேலைகள் பல இருந்துள்ளன. வீட்டிலேயே உட்கார்ந்து வேலையை முடிப்பதற்கு பதில் ஒரு வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளார் இந்த வாலிபன்.
என்னன்னு தானே யோசிக்கிறீங்க? மேலும் படிங்க!
சிங்கப்பூரிலேயே அதிக நீளமான பஸ் ரூட் ஆக கருதப்படுவது ரூட் நம்பர் 858 தான். இது வுட்லேண்ட் பகுதியில் இருந்து தொடங்கி சாங்கி விமான நிலையம் வரை செல்லும் மேலும் அங்கிருந்து திரும்ப வுட்லேண்ட் பகுதிக்கு செல்லும். இதன் தொலைவு ஏறத்தாழ 73.4 கிலோ மீட்டர். மேலும் இந்த தொலைவைக் கடக்க இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை ஆகலாம். இந்த நேரத்தை பயன்படுத்தி தான் ஜியா தனது பள்ளி வேலைகளை பஸ்ஸில் சென்று கொண்டே செய்திருக்கிறார்.
மேலும் பேருந்தில் செல்லும் பொழுது மாறிக்கொண்டே இருக்கும் ஜன்னலோர காட்சிகள் அவருக்கு கவனமுடன் வேலையை செய்ய உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி மதியம் 12:45 மணியளவில் தொடங்கிய இந்த பயணம் வுட்லேண்ட்ல் இருந்து புறப்பட்டு சாங்கி நிமான நிலையம் சென்று மேலும் வுட்லேண்ட் பகுதிக்கு திரும்பும் வரை 73.4 கிலோ மீட்டர்களை கடந்து 3:35 மணியளவில் முடிந்திருக்கிறது. இடைப்பட்ட இந்த மூன்று மணி நேரமும் கவனமுடன் தனது வேலையை முடிக்க மிகவும் உதவிகரமாக இருந்தது என ஜியா தெரிவித்துள்ளார்.
இது இவருக்கு இரண்டாவது முயற்சியாம் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் முறை இது போன்ற பேருந்தில் சென்று கொண்டே வேலை செய்ய எண்ணி அதே பேருந்து எண் 858 ல் ஏறியுள்ளார். அதன் வழித்தடம் பற்றி சரியாக அறிந்து கொள்ளாமல் வுட்லேண்ட்ல் இருந்து சாங்கி விமான நிலையம் வரை சென்று விட்டு அங்கேயே இறங்கி உள்ளார். மீண்டும் அந்த பேருந்து வுட்லேண்ட் பகுதிக்கு செல்லும் என்பதை அறியாமல் இருந்ததால் இது போன்ற இடையூறு ஏற்பட்டு இருக்கிறது.
இது திரும்ப உட்லேண்ட் பகுதிக்கு செல்லும் என்ற தகவலை அறிந்ததும் தனக்கு மேலும் சிறிது நேரம் கிடைக்கும் என உறுதியாக இரண்டாவது முறை முயற்சித்துள்ளார். அவரது இந்த முயற்சியை டிக் டாக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பேருந்தில் சென்று கொண்டே வேலை செய்வது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. அனைவருக்கும் அது பொருந்தாது இருப்பினும் ஜியோ கூறியுள்ளதாவது,
ஜூலை ஒன்றாம் தேதி தனது பயணத்தை துவங்கும் முன் பேருந்தில் எந்த அளவுக்கு குறைவான பயணிகள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தனது வேலை சுலபமாக இருக்கும் என எண்ணி உள்ளார். அவர் நினைத்தது போலவே பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் தனக்கு அருகில் உள்ள மற்றொரு சீட்டும் காலியாக இருந்ததால் அவருக்கு சிறிது பர்சனல் ஸ்பேஸ் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
ஏன் இது அனைவருக்கும் பொருந்தாது என்றால் பேருந்தில் செல்வது சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் மோஷன் சிக்னஸ் உபாதைகள் கொண்டவர்களுக்கு இது சிரமம் தான். மேலும் தான் சென்ற பேருந்து மிகவும் சமூகமாக சென்றதால் வேலை செய்ய எளிதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தான் இந்த பயணத்தில் இருந்த ஒரே சவால்.
இந்த பயணத்திற்கு பத்துக்கு ஏழு என்ற ரேட்டிங்கை அவர் வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது பேருந்தில் சென்று கொண்டே வேலை செய்ய விரும்புவோர் தங்களது லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோன்களை முழு சார்ஜில் வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் போன் ஹாட்ஸ்பாட் மூலம் தான் இன்டர்நெட் கனெக்ட் செய்து வேலை செய்வதால் இந்த இரண்டும் முழு சார்ஜில் மிகவும் அவசியம்.
இது போன்ற பயனுள்ள பயணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும் மேலும் எதிர்காலத்திலும் இது போன்ற பயணங்களை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜியா பதிவிட்டுள்ள டிக் டாக் வீடியோவில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில் சிலர் புதிய பஸ் ரூட்டுகளை அவருக்கு பரிந்துரையும் செய்துள்ளனர்! அவற்றை எதிர்காலத்தில் முயற்சி செய்து பார்ப்பதாக ஜியா டிக் டாக் கமெண்டில் தெரிவித்துள்ளார். இது போன்ற புதிய மற்றும் வித்தியாசமான முயற்சிகள் ஆன்லைனில் பதிவிடும் பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நீங்களும் ஒரு ரிலாக்ஸ் ட்ரிப்-க்கு இந்த ஐடியாவ யூஸ் பண்ணலாமே!