SINGAPORE: சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் அதிகம் விரும்பும் ஒரு விஷயம் லாட்டரி. இவை 4D மற்றும் டோடோ என்று அழைக்கப்படும் ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் கட்டப்படும் பந்தயங்கள் ஆகும். இந்த பந்தயங்களை விளையாட நீங்கள் சிங்கப்பூர் ரூல்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் கணக்கு வைத்துக்கொண்டு விளையாடலாம்.
ஆனால், இதில் ஏமாற்று வேலை என்று எதுவும் கிடையாது. இது Genuine-ஆக நடைபெறும் லாட்டரி போட்டியாகும். சிங்கப்பூர் Pools ஒரு உலகத்தரம் வாய்ந்த கேமிங் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிங்கப்பூர் Pools 4D லாட்டரி மற்றும் டோட்டோ பந்தயங்களை ஆன்லைனில் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் வைக்க அனுமதிக்கிறது.
சிங்கப்பூர் பூல்ஸ் கணக்கில் பதிவு செய்ய நீங்கள் கண்டிப்பாக சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ அல்லது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவராகவோ இருக்க வேண்டும். சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர் ஆக இருந்தால்,சரியான சிங்கப்பூர் வெளிநாட்டு அடையாள எண்ணுடன் குறைந்தது 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். உள்ளூர் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். இப்படி சில விதிமுறைகள் இதில் உள்ளன.
இந்நிலையில், நேற்று செப்.26 நடைபெற்ற சிங்கப்பூர் டோடோ லாட்டரிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், முதல் பரிசான $1,207,911 டாலர் தொகையை ஒருவர் வென்றுள்ளார். அதாவது, இந்திய மதிப்பில், 9 கோடியே 84 லட்சம் தொகை இது. 6, 19, 24, 34, 43, 46 ஆகிய லாட்டரி எண் கொண்ட நபர் தான் இந்த பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
அதேபோல், இரண்டாவது பரிசான $254,297 டாலர் தொகையை ஒருவர் வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில், ரூ.2 கோடி மதிப்புள்ளதாகும்.
மூன்றாவது பரிசான 1841 டாலரை 95 பேர் வென்றுள்ளனர்.