தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால் இதனால் அடுத்த தலைமுறையினர் சிலர் தவறான ரூட்டை பிடித்துவிட்டனர் என்பது தான் சோக செய்தியாகி இருக்கிறது.
ஆன்லைனில் இருக்கும் ஏகப்பட்ட இணையத்தளம் மூலம் எது வேண்டும் என்றாலும் நிமிடங்களில் கிடைத்துவிடுகிறது. அதனால், பெண்களிடம் சில்மிஷம் செய்த ரோட் சைட் ரோமியோக்களின் கூடாரமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவருகிறது. இளம் பெண்களிடம் காதல் மொழி பேசி அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். பின்னர் அவர்களை பாலியல் வன்புணர்வு செய்யும் கேவலமும் நடைபெற்று வருகிறது. இதில் அதிகமாக தற்போது சிக்கி வருவது 18 வயதுக்கும் கீழ் இருக்கும் சிறுமிகளே என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகி இருக்கிறது.
சிங்கப்பூரில் இது அதிகரித்து வருவதற்கு அலாரமாகி இருக்கிறது Tong Wei Xiangன் கைது. 20 வயது மதிக்கத்தக்க இந்த இளைஞன் Tong ஆன்லைனில் அதிகமாக நேரத்தினை செலவழிப்பான். அப்போது அவன் Wink என்ற ஆன்லைன் செயலியை பயன்படுத்தி இருக்கான். அதில், 13 வயது சிறுமியுடன் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ரோமியோக்களுக்கு சொல்ல வேண்டுமா, காதல் வார்த்தைகளை அள்ளி வீசியதில் அச்சிறுமி இவர் பக்கம் மயங்கி இருக்கிறார். இவருக்கும் நெருக்கம் அதிகமானதை அடுத்து அச்சிறுமிக்கு பொருளாதார பிரச்சனை இருப்பதை அறிந்த Tong இங்கு தான் வேலையை காட்ட துவங்குகிறார். உனக்கு நான் $60 சிங்கப்பூர் டாலர் தருகிறேன். ஆனால் நீ எனக்கு Oral Sex செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
அதற்கு அப்பெண்ணும் சம்மதித்து விட, Tong வீட்டில் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். தான் விரும்பியது போல அப்பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கிறார். வீட்டின் ஒதுக்குப்புறமான படிக்கட்டில் அப்பெண்ணுடன் இருந்து இருக்கிறார். இங்குடன் இது முடியவில்லை. தொடர்ந்து இதே வயது பெண்களை டார்க்கெட் செய்யும் tong காதல் வசனங்களை கொடுத்தும், டாலரை அனுப்பியும் தன் ஆசையை அப்பெண்களிடம் தீர்த்து கொண்டிருக்கிறார்.
இந்த விஷயம் வெளியில் கசிந்ததை அடுத்து tong கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணையில் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இவரும் 20 வயதே ஆகும் இளைஞர்கள் என்பதால் மறுவாழ்வு மையத்தில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை சிங்கப்பூர் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. பெண் பிள்ளைகளை அதிலும் சிறுமிகளை ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் வருங்கால தலைமுறை சீரழியும் அபாயம் உருவாகும் என பல தரப்பில் இருந்து கண்டன குரல் எழுந்து வருகிறது.