சிங்கப்பூரில் வேலைக்கு வர பல பாஸ்கள் இருக்கும். ஒவ்வொரு பாஸிற்கும் வெவ்வேறு வகையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. சம்பளமும் வேறு மாதிரியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்கில்லே இல்லாமல் வேலைக்கு வர இருக்கும் PSA குறித்து தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படிங்க.
PSA என்றால் Port of Singapore Authority. Portல் இருக்கும் வேலைக்கு ஆட்கள் டிரைவர் மற்றும் லேஷிங் வொர்க்ஸ் என இரண்டு பணியிடங்களுக்கு மட்டுமே எடுப்பார்கள்.
இதில் டிரைவராக நீங்க psaல் வரும் போது இந்தியாவில் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தாலே போதுமானது. லேசிங் வொர்க்ஸ் என்பது துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களில் இருக்கும் கண்டெயினர் அசையாமல் இருக்க செய்யும் கம்பு அடைப்பு என்பது தான் வேலையாக இருக்கும்.
இதையும் படிங்க: SPassல் சிங்கப்பூர் வேலைக்கு போகணுமா? அப்போ Safety coordinator கோர்ஸ் படிங்க… சம்பளம் மட்டும் இத்தனை டாலரில் கிடைக்குமாம்
இந்த வேலையை வாங்கி தர ஏஜென்ட் கட்டணமாக 3 லட்சம் முதல் 3.5 லட்சம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது. சம்பளமாக 1300 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலும், தங்குமிடத்திற்கு சம்பளத்தில் பிடித்தம் இருக்கும். இரண்டு ஷிப்ட்களில் 12 மணி நேரம் வேலை இருக்கும். பெரும்பாலும் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வேலை இருக்கும். லேஷிங் வொர்க்கில் சில வருடங்கள் பணி அனுபவம் இருந்தாலே உங்களுக்கு சம்பள உயர்வுடன் பணியில் ப்ரோமோஷனும் கிடைக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்
டிரைவராக வேலைக்கு வருபவர்கள் பேட்ச் மற்றும் ஹெவி என இரண்டில் ஒன்று இருக்க வேண்டியது முக்கியம். சாதாரண லைசன்ஸ் இருக்கக் கூடாது. ஆங்கிலம் கண்டிப்பாக பேசத் தெரிய வேண்டும். அல்லது புரிந்து கொள்ளும் அளவிலாவது இருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் முதல் 3 மாதம் டிரையினிங் இருக்கும். அப்போதைய காலத்தில் தங்குமிடம், உணவு முதல் சம்பளத்தில் கொடுக்கப்பட்டு விடும். பின்னரே, சம்பளம் மட்டுமாக மாற்றப்படும். இந்த வேலைகளில் சிங்கப்பூர் செல்பவர்கள் துறைமுகத்தினை விட்டு வெளியில் வண்டியை ஓட்டக்கூடாது.