TamilSaaga

சிங்கப்பூர் மக்களின் Daily Doseஆக இருக்கும் MRT… 2030க்குள் நடக்க இருக்கும் மாற்றங்கள்.. இத எப்படி மிஸ் பண்ணலாம் நீங்க

சிங்கப்பூர் மக்களுக்கு எம்.ஆர்.டி (Mass Rapid Transit) எனப்படும் ரயில் போக்குவரத்து ரொம்பவே முக்கியமானது என்று சொல்லலாம். 1987-ல் முதன்முதலாக 5 ஸ்டேஷன்களில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று 200 எம்.ஆர்.டி, எல்.ஆர்.டி ஸ்டேஷன்களாக பரந்து விரிந்திருக்கிறது.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்?

சிங்கப்பூரின் இந்த ரயில் பயணம் தொடங்கிய ஆண்டு 1984. அப்போது முதல் அதன் முக்கியமான சிற்பியாக இருந்து வருபவர் என்ஜி கீ நாம். தற்போது 64 வயதாகும் என்ஜியின் முன் இருக்கும் சவால், தற்போது 260 கி.மீ நீளம் கொண்ட இந்த ரயில் போக்குவரத்தை 50% அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, 2030-கள் முடிவதற்குள் இந்த ரயில் பாதையின் நீளத்தை 360 கி.மீ ஆக அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அவரின் தற்போதைய குறிக்கோள்.

பொது போக்குவரத்துத் திட்டம்

சிங்கப்பூரில் பெரும்பாலான மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டே புதிய திட்டத்தை அரசு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இதன்படி, நடந்தோ, சைக்கிளிலோ அல்லது பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியோ பயணிக்கையில் அருகில் இருக்கும் பகுதிக்கு 20 நிமிடங்கள் மற்றும் மிகவும் ரஷ்ஷான அலுவலக நேரங்களில் அதிகபட்சமாக 45 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்துக்கு நீங்கள் சென்றடைந்து விட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை மேற்குக் கடற்கரைப் பகுதியோடு இணைக்கும் The Cross Island Line எனப்படும் ரயில் பாதையை 2030 முடிவதற்குள் முடித்துவிட அரசு திட்டமிட்டு தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஓட்டுநர் இல்லாத உலகின் நீண்டதூர ரயில் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படும் Thomson-East Coast Line (TEL)-இன் மூன்றாவது கட்ட வேலைகள் முடிந்து, பயணிகள் சேவைக்காகக் கடந்த நவம்பர் 13-ம் தேதி தொடங்கப்பட்டன. இதன்மூலம் Woodlands South-இல் இருந்து Orchard வரையிலான பேருந்து பயண நேரமான 50 நிமிடங்களை, 35 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

சிரமங்கள்

இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது பொதுமக்களுக்குப் போக்குவரத்து இடையூறு, ஒலி மாசுபாடு போன்ற பிரச்னைகள் இருப்பதை என்ஜி உணர்ந்தே இருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில், இதுபோன்ற பிரச்னைகள் எப்போதுமே தற்காலிகம்தான். அதை மக்கள் சகித்துக் கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கான நீண்டகால தீர்வுகள் சரியாகக் கிடைக்கும் என்பதுதான். சுற்றுச்சூழலுக்குத் தொந்தரவு கொடுக்காத வகையில் நாங்கள் திட்டங்களை வடிவமைக்கிறோம். குறிப்பாக தூசு, அதிக ஒலி போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையிலேயே திட்டமிடுகிறோம் என்றும் அவர் சொல்கிறார்.

குறிப்பாக தரைக்கு அடியில் ஏற்படுத்தப்படும் ரயில் நிலையங்களுக்கான வேலைகள் என்பது நமது நேரத்தையும் பணத்தையும் அதிகம் கேட்கும் வகையிலான திட்டங்கள் என்கிறார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு Bencoolen ரயில் நிலையம்தான் சிங்கப்பூரில் மிகவும் ஆழமான ரயில் நிலையம். இது தரையில் இருந்து 43 மீட்டர், அதாவது 14 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் உயரம் அளவுக்குத் தரையின் கீழ் அமைந்திருக்கும் ரயில் நிலையம். அதேபோல், சைக்கிள் பாதை தற்போது இருக்கும் 500 கி.மீ என்கிற தூரத்தை 2030-க்கு முன் 1,300 கி.மீ என்கிற அளவுக்கு அதிகரிக்கவும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருக்கிறது. இப்படி சிங்கப்பூர் மக்களின் பொதுப்போக்குவரத்து அனுபவத்தை மேம்படுத்த போக்குவரத்துத் துறை பல்வேறு திட்டங்களைத் தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts