TamilSaaga

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி: 1.7 மில்லியன் டாலர் பறிபோனது!! மக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்……

சிங்கப்பூர், மார்ச் 14, 2025 – சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு தொடக்கம் முதல் இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக காவல்துறையிடம் 6 புகார்கள் பதிவாகியுள்ளன.

மோசடிக்காரர்கள் சிங்கப்பூர் நாணய வாரியம் (MAS), தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC), Income Insurance மற்றும் UnionPay போன்ற அமைப்புகளின் அதிகாரிகள் போல் பாசாங்கு செய்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் +65 அல்லது 8 என்ற எண்களிலிருந்து அழைப்புகளை மேற்கொண்டு, காப்புறுதி சந்தா செலுத்தப்படவில்லை அல்லது காப்புறுதித் திட்டம் காலாவதியாக உள்ளது போன்ற பொய்யான காரணங்களைச் சொல்லி பணம் பறிக்கின்றனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் நாணய வாரியம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. “பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளைப் பெற்றால் உடனடியாக சந்தேகம் கொண்டு, விழிப்புடன் இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை உடனுக்குடன் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts