இன்று உலக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல சிறப்பான ஏற்பாடுகளும் சிங்கப்பூரில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய மனிதவள அமைச்சகம் அமைச்சர் டான் சீ லெங் வெளியிட்ட காணொளியில் பின்வருமாறு பேசியுள்ளார். “புலம்பெயர்ந்த எங்கள் ஊழியர் நண்பர்களுக்கு வணக்கம்!, அனைத்துலக புலம்பெயர்ந்தோர் ஊழியர் தினம் உலகின் வெவ்வேறு பகுதிகளில், அந்நாட்டின் மேம்பாட்டிற்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் ஆற்றும் பங்களிப்பை புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினமாக கொண்டாடுகிறது”.
இதையும் படியுங்கள் : ஊழியர்களுக்கு 1000 டாலரை அள்ளிக்கொடுத்த நிறுவனம்
“சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல, சொந்த நாட்டில் உள்ள தன் குடும்பத்தினருக்கும் இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தில் சிங்கப்பூருக்கு வரும் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்கின்றார்கள். இவ்வாண்டின் கருப்பொருள் “நம் கைகளை ஒன்றிணைப்போம், பந்தங்களை உருவாக்குவோம்” என்பதே. சமூகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இந்த சிறப்பான நிகழ்வை உங்களுடன் கொண்டு வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்”.
“தொழிலாளர்களாகிய பலர் உங்கள் தங்கும் விடுதிகளில் அல்லது பொழுதுபோக்கு மையங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்று இருப்பீர்கள். தங்கும் விடுதி நடத்துனர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள், முதலாளிகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் கூடி இந்த கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.