TamilSaaga

சிங்கப்பூரின் அடையாளமாக விளங்கும் ‘கம்பீரமான மெர்லயன் சிங்கம்’… தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு…!!

சிங்கப்பூரின் அடையாளமாக விளங்குவது சிங்க வடிவிலான மெர்லயன் எனப்படும் சிலையாகும். பலரும் சிங்கப்பூருக்கு வந்த அடையாளமாக இந்த சிலையின் அருகில் இருந்து தான் புகைப்படம் எடுப்பார்கள். மேலும் சிங்கப்பூருக்கு வந்த நினைவாக ஏதேனும் பொருள் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த சிங்கத்தின் சிலையை கொண்ட டீசர்ட்டுகள் மற்றும் கீ செயின்கள் போன்றவற்றை தான் வாங்கி செல்வார்கள்.

இந்த மெர்லயன் சிலையை சீரமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதால் வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை சிலை தற்காலிகமாக மூடப்படும் என்று சிங்கப்பூரின் பயணத்துறை கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பணி முடிவடையும் வரை அச்சிலையினை படம் எடுக்க பொதுமக்கள் எவருக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிலை திறக்கப்படும் வரை அதே பூங்காவில் உள்ள சிறிய சிலையின் அருகே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதி சிலைகளை பழுது பார்க்கும் பணியானது மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த முறை நீண்ட நாட்களாக மூடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts