சிங்கப்பூரில் பெண் ஒருவரை இன ரீதியாக துன்புறுத்தி நெஞ்சில் உதைத்து காயப்படுத்திய நபரின் மீது கடந்த வெள்ளிக்கிழமை (செப்.10) அன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
55 வயதான இந்தியர் இந்தோசா நிட்டா விஷ்ணுபாய் அவர்கள் தனியார் துணைப்பாட ஆசிரியராக பணிபுரிந்து வருபவர். வோங் சிங் போங் எனும் 30 வயது நபர் பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.
சுவா சூ காங் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த விஷ்ணுபாய் மூச்சுவிட சிரமமாய் இருந்ததால் தனது முகக்கவசத்தை இறக்கிவிட்டுள்ளார். அப்போது போங் அவர்கள் மாஸ்க்கை சரியாக அணியுபடி உரத்த குரலில் பேசியதாகவும் பின்பு இன ரீதியிலான கருத்துக்களால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த இட்த்தை விட்டு விஷ்ணுபாய் நகரும் போது அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார் போங். விழுந்ததில் கைகளில் அந்த பெண்ணுக்கு சிராய்ப்புகள் ஏற்பட்டு அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.