TamilSaaga

வேலையிழந்த பல்லாயிரம் இந்தியர்கள்… பேஸ்புக்கால் நடந்த அதிர்ச்சி… உங்க வேலைக்கும் ஆபத்து இருக்கலாம்..?

நாட்டின் பொருளாதார அடிப்படையில் தான் வேலை வாய்ப்பின் அதிகரிப்பு நடக்கும். அது சரியும் பட்சத்தில் பல்லாயிரமானோருக்கு வேலை இழப்பு ஏற்படும். இதை ஒரு குறிப்பிட்ட கம்பெனி செய்யும் போது மாஸ் லேஆஃப் எனக் கூறுவர். இவ்வாறு சமீபத்தில் பேஸ்புக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11000 ஆயிரம் பேரில் அதிகமானோர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆசிய பிசிபிக் பகுதியின் பேஸ்புக் தலைமையிடமாக விளங்குவது சிங்கப்பூர் மெட்டா அலுவலகம் தான். இங்கு இந்த Mass Layoff மூலம் சுமார் 1000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு அதிகமானோர் employment pass வைத்து இருக்கும் இந்தியர்கள் என அறியப்படுகிறது.

employment pass என்பது பெஸ்ட்டாக இருக்கும் வெளிநாட்டு பட்டதாரிக்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய வழங்கப்பட்டு வரும் அனுமதி எனக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பின் படி சிங்கப்பூரில் சுமார் 1,77,100 பேர் employment pass வைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த ஊழியர்கள் அதிகம் பேர் டெக் துறையில் இருக்கிறார்கள். அதனால் மெட்டா முதற்கொண்டு பிரபலமான டெக் நிறுவனங்கள் செய்யும் லேஆஃப்பில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களே என சமீபத்திய ஆய்வில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சில நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு எடுக்கும் திட்டத்தினையும் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் பாஸ் வைத்திருக்கும் பல இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts