பெண்களை அந்தரங்க புகைப்படங்களை ஹாலிவுட் படங்களின் காட்சிகளை விஞ்சும் வகையில் ஷூட் செய்து ரசித்து பார்த்த மருத்துவரின் லைசன்ஸை சிங்கை அரசு ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூரில் பிரபல மருத்துவமனை ஒன்றில், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்தவர் சூ பென். வயது 32. தொழிலில் கைத்தேர்ந்த நிபுணராக இருந்ததால், இவருக்கு என்று ஒரு மரியாதை அங்கு இருந்தது.
இந்த சூழலில், கடந்த 2018ம் ஆண்டு தனது மருத்துவமனையில் பணிபுரியும் சக பெண் மருத்துவர் ஒருவருடன் சூ பென் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கே தெரியாமல் அந்த பெண் சூ பென் மொபைலை பார்த்தபோது, அதில் தனது அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசில் புகார் அளிக்க சூ பென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சில மாதங்களிலேயே அவர் ஜாமீன் வெளிவர, திறமையான மருத்துவர் என்பதால், மீண்டும் அதே ஹாஸ்பிடலில் அவருக்கு வேலையும் வழங்கப்பட்டது.
அதேசமயம், அவர் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தனக்கு கீழே வேலை பார்க்கும் நர்ஸை இதுபோல் அந்தரங்கமாக புகைப்படம் எடுத்து மாட்டிக் கொண்டார். இரண்டாவது முறையாக அதே புகாரில் சிக்கியதால், இம்முறை போலீசார் அவரை சற்று சிறப்பாக கவனிக்க, பல உண்மைகள் வெளிவந்தது.
அதாவது, சூ பெண் தனது ஷூவில், ரகசிய கேமராவை பொருத்தி பெண்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அதிலும், குட்டை பாவாடை அணிந்து வருபவர்கள் தான் இவரது இலக்காக இருந்துள்ளனர். கேஷுவலாக பேசுவது போல இருக்கையில் இருந்தபடியே காலை, எதிரில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் நார்களுக்கு அருகே கொண்டுச் சென்று, அவர்களின் அந்தரங்கள் பகுதிகளை ரெக்கார்டு செய்திருக்கிறார்.
இதுபோல், 3,200க்கும் அதிகமான பெண்களை ரெக்கார்டு செய்திருக்கிறார். இவை அனைத்தையும் போலீஸ் வாக்குமூலத்தில் ஒப்பித்திருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் சூ பென் விடுதலையாகவிருந்த நிலையில், இவரால் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற கருதப்பட்டதால், தற்போது இவருடைய மருத்துவர் லைசன்ஸை சிங்கை அரசு ரத்து செய்துவிட்டது.
தனது சபல புத்தியால், இனி வாழ்நாளில் ஸ்டெதஸ்க்கோப் அணியவே முடியாத நிலைக்கு சூ பென் தள்ளப்பட்டுள்ளார்.