கோவிட் -19 இலிருந்து தற்காலிக மீட்பு தொடர்ந்து வரும் காரணத்தால் SIA ஸ்கூட் குழுவினர் வானத்திற்குத் திரும்பும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
10 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் விமானிகளில் ஒன்பது பேரும், 10 கேபின் குழுவினரில் எட்டு பேரும் மீண்டும் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது பறக்கிறார்கள்.
பலரும் தங்கள் சீருடையில் திரும்பி வந்துள்ளனர் என்பது நம்பிக்கையூட்டும் விஷயங்களாக பார்க்கப்படுகிறது. நிலைமை நிச்சயமாக ஆனால் மெதுவாக மீண்டு வருகிறது.
எப்படி இருந்தாலும் உடனடி எதிர்காலம் என்பது இருண்டதாகவே காணப்படும் என்று ஆய்வாளர்களால் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.
சுமார் 2,200 விமானிகள் அதாவது மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதத்தினர் இப்போது குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை வானில் பறக்கிறார்கள். இதில் SIA குழுவின் பட்ஜெட் ஸ்கை ஸ்கூட்டின் விமானிகளும் உள்ளனர்.
சுமார் 6,500 கேபின் குழுவினர், அதில் ஏறத்தாழ 10 பேரில் எட்டு பேர் ஒரு மாதத்திற்கு ஒரு விமானத்தையாவது உபயோகப்படுத்தி பறக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாத கணக்கீட்டின்படி SIA குழுமத்தில் சுமார் 3,200 க்கும் மேற்பட்ட விமானிகளும் கிட்டத்தட்ட 11,000 கேபின் குழுவினரும் இருந்ததாகக் அதன் முந்தை புதுப்பித்தல் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிங்கப்பூரின் உள்ளூர் விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆசியா தனது விமானிகளில் 50 சதவீதம் பேர் மற்றும் கேபின் குழுவினர் மீண்டும் பணிக்கு வந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளது.