TamilSaaga

ஊழியர் பற்றிய FB பதிவுக்குப் பிறகு 2 நாளில் நடந்த மரணம் – Sumo Salad விவகாரத்தில் என்ன நடந்தது? MOM விசாரிக்கிறது!

சிங்கப்பூரில் ஆரோக்கியமான உணவுகளுக்கு பெயர் போன பிரபலமான உணவகம் “சுமோ சாலட்” (தற்பொழுது சுமோ வெல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இங்கு சாலட் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகள் மிகவும் பிரசித்தம். 

அதன் உரிமையாளரான ஜேன் லீ (வயது 40) 2025 ஜூலை 18 அன்று சந்தேகத்திற்கிடமாக திடீரென மரணமடைந்தார். அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் பல கோணங்களில் சந்தேகங்களை கிளப்பியது.

சமீபத்தில் அவரது நிறுவனத்தில் சட்டபூர்வமாக பல சவால்களை சந்தித்து வந்தார் ஜேன் லீ. இதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தான் பணியில் இருக்கும் பொழுது காயமடைந்ததாகவும் அதற்க்கு நஷ்ட ஈடு கோரியும் சுமோ வெல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட சதி என பல இடங்களில் ஜேன் லீ தெரிவித்துள்ளார். MOM எனப்படும் Ministry Of Manpower மற்றும் சிங்கப்பூர் காவல் துறையும் இது குறித்து விசாரித்து வரும் நிலையில் திடீரென அவர் மரணமடைந்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

இந்த சம்பவத்தால் தானும் தனது கணவரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதை தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், வழக்கு தொடர்ந்த அந்த ஊழியர், விபத்து நடந்த நாளில் முன்னதாகவே பணிகளை முடித்து சென்றிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற விபத்தை பொய்யாக கட்டமைக்கவே அவர் திட்டமிட்டு வெகு நேரம் பணியில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தன்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட விபத்து எனவும், அதன் பின்னர் அந்த ஊழியர் சாதாரணமாக நடமாடும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதில் பகிர்ந்துள்ளார். மருத்துவர்கள் அதிகாரிகளிடம் மட்டும் அந்த ஊழியர் அனைத்தையும் பெரிதுபடுத்தி பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குப்பைகளை வெளியேற்றும் பொழுது கீழே விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், அதற்காக Work Injury Compensation (WIC) சட்டத்தின் கீழ் தனக்கு நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அந்த ஊழியர் வழக்கு தொடுத்துள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க



இது குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் லீ-யின் மரணம் சிங்கப்பூர் சிறு வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற மக்கள் காப்பீடு இல்லாமல் இயங்கி வரும் சிறு நிறுவனங்களை குறிவைத்து பணம் பறிக்க முயல்வதாகவும் லீ குறிப்பிட்டுள்ளார்.

அவரது இறுதி அஞ்சலி நடைபெற்ற பொழுது பலர் அவரை பற்றி கூறியவை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மிகவும் அன்பானவர், சுயநலமற்றவர், அனைவருக்கும் உதவும் குணம் படைத்தவர் எனவும் அவரை Sunshine எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற கோகோ-கோலா நிறுவனத்தில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள்!

இது குறித்து MOM கூறுகையில், மேற்கண்ட சம்பவம் குறித்து தாங்கள் தீர விசாரித்து அதற்கு தீர்வு காண்போம் எனவும் ஒரு வேலை WIC சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts