சிங்கப்பூரில் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை குறைந்தபட்ச ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூரின் தேசிய சம்பள மன்றம் வலியுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வாவது வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை குறித்து சிங்கப்பூரின் சம்பள மன்றம் பரிந்துரை செய்திருப்பது பத்து ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
அது மட்டுமல்லாமல் சம்பள மன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இதன் அடிப்படையில் டிசம்பர் 1, 2023 முதல் நவம்பர் 30, 2024 ஆம் ஆண்டு வரை இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. சிங்கப்பூரின் பொருளாதார சூழ்நிலையானது ஊழியர்களுக்கு சாதகம் இல்லாத வகையில் உள்ளதால் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் ஆக இருவருக்கும் பாதகம் இல்லாத வகையில் சம்பள உயர்வானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் மாதம் 2500 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக பெறும் ஊழியர் ஆண்டில் 5.5% முதல் 7.5% வரை ஊதிய உயர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் வர்த்தகத்தில் முன்னேற்றத்தில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட விகிதத்தில் சம்பள உயர்வு அல்லது குறைந்தது 85 டாலர் முதல் 105 டாலர் வரை ஊதிய உயர்வு இவற்றில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் நிறுவனம் நன்முறையில் செயல்பட்டு வந்து வர்த்தகமும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் முதலாளிகள் தயங்காமல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பல தமிழக ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வானது உபயோகமாக இருக்கும் என நம்புகின்றோம்.