சிங்கப்பூரில் இருந்து மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு Spectrum of Seas சொகுசு கப்பலை இயக்க முடிவு செய்துள்ளது Royal Caribbean நிறுவனம். இதற்கான புக்கிங்களை அந்த நிறுவனம் தற்போது திறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயணங்கள் அடுத்த 2022ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயணங்கள் மூன்று முதல் ஒன்பது இரவுகள் வரை நீடிக்கும் என்று ராயல் கரீபியன் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சுகாதார நிலை மற்றும் எல்லை நடவடிக்கைகளின் அடிப்படையில் கப்பல் பயணம் சிங்கப்பூர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டது. Quantum of the Seasன் பயணம் மீண்டும் ஏப்ரல் 7, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ராயல் கரீபியன் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் செய்யப்பட்ட அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விருந்தினர்களுக்கு பெருந்தொற்றுக்கு எதிராக முழு தடுப்பூசி போட வேண்டும் என்று நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.
கடந்த 2019ல் தொடங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ், ஆசிய கப்பல் சந்தைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 4,246 விருந்தினர்கள் மற்றும் 1,551 குழு உறுப்பினர்களுக்கு தன்னுள் இடமளிக்கிறது என்று ராயல் கரீபியன் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இது கப்பலின் முன் முனையில் நியமிக்கப்பட்ட பகுதிகளில் “தனி தொகுப்பு வசதிகள்”, 19 வகையான உணவு விருப்பங்கள் மற்றும் பல அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன என்றும் “இதுவரை கடலில் அதை பார்த்ததில்லை” என்று சொல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ராயல் கரீபியன் இன்டர்நேஷனலின் துணைத் தலைவர் ஆங்கி ஸ்டீபன் வெளியிட்ட அறிக்கையில் “ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ் மூலம் புதிய சாகசங்களின் முழு அளவை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மீண்டும் மீண்டும் கப்பல்களில் புதிய எழுச்சி காணப்படுகிறது. அத்துடன் கணிசமான எண்ணிக்கையிலான புதிய விருந்தினர்களைப் பயணித்து, எங்கள் விருந்தினர்களுக்கு சிறந்த ராயல் கரீபியன் அனுபவத்தைக் கொண்டுவர எதிர்நோக்குகிறோம் என்று கூறியுள்ளார்.