சிங்கப்பூரில் சாலைப் பாதுகாப்பு எப்போதும் ரொம்ப முக்கியம். ஆனா, இப்போ சமீபகாலமா நிறைய விபத்துகள் நடக்கிறதும், சாலைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, 2025 ஜூன் 12 முதல், சில ஆபத்தான ஓட்டுதல் குற்றங்களுக்கு (dangerous driving offences) இருந்த கட்டாயக் குறைந்தபட்ச தண்டனைகள் நீக்கப்படுது.
1. முதல்முறை குற்றவாளிகளுக்கு நீக்கம்: கடுமையான ஓட்டுதல் (dangerous driving) அல்லது கவனக்குறைவான ஓட்டுதல் (careless driving) காரணமாக மரணம் அல்லது கடுமையான காயம் (grievous hurt) ஏற்படுத்திய முதல் முறை குற்றவாளிகளுக்கு கட்டாய குறைந்தபட்ச சிறைத் தண்டனையும், ஓட்டுநர் உரிமம் தடையும் (disqualification period) நீக்கப்பட்டிருக்கு. முன்பு, இந்தக் குற்றங்களுக்கு ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் வரை கட்டாய சிறைத் தண்டனையும், 5 முதல் 10 வருடங்கள் வரை ஓட்டுநர் உரிமத் தடையும் விதிக்கப்பட்டது.
2. மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு தண்டனைக் குறைப்பு: மரணம் அல்லது கடுமையான காயம் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான வாகனம் ஓட்டி, மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு கட்டாய குறைந்தபட்ச சிறைத் தண்டனை முறையே இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒரு ஆண்டாகக் குறைக்கப்படும்.
3. இந்த புதிய சட்டப்படி, ஒரு விபத்துல யாராவது இறந்துட்டா, அந்த விபத்தை ஏற்படுத்தினவர் மீண்டும் மீண்டும் இந்த மாதிரி குற்றம் செஞ்சவரா இருந்தா (அதாவது, ஏற்கனவே இதுபோல குற்றம் செஞ்சு தண்டனை வாங்கி இருப்பாரு) அவருக்கு இப்போ கட்டாயமா 2 வருஷம் ஜெயில் தண்டனை கொடுப்பாங்க.
அதேபோல, ஒரு விபத்துல யாராவது கடுமையா காயமடைஞ்சுட்டா, அந்த விபத்தை ஏற்படுத்தினவர் மீண்டும் மீண்டும் குற்றம் செஞ்சவரா இருந்தா, அவருக்கு கட்டாயமா 1 வருஷம் ஜெயில் தண்டனை கொடுப்பாங்க.
ஆனா, இந்த குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் மாறாது. அதாவது:
ஒருத்தர் இறந்தா, அதிகபட்சம் 15 வருஷம் வரைக்கும் ஜெயில் தண்டனை கிடைக்கும்.
ஒருத்தர் கடுமையா காயமடைஞ்சா, அதிகபட்சம் 10 வருஷம் வரைக்கும் ஜெயில் தண்டனை கிடைக்கும்.
நீதிமன்றங்களுக்கு அதிகாரம்:
ஜூன் 11 அன்று வெளியிட்ட அறிக்கையில், உள்துறை அமைச்சகம் (MHA), “ஒவ்வொரு வழக்கிலும் பொருத்தமான தண்டனையைத் தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இருக்கும், மேலும் மிக மோசமான குற்றவாளிகளுக்கு தொடர்ந்து கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று MHA எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை:
போக்குவரத்து காவல்துறை (TP) பிப்ரவரி 21 அன்று வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் விபத்துகளில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 139 ஆபத்தான விபத்துகளில், 46 வழக்குகள் – அதாவது மூன்றில் ஒரு பங்கு – அதிவேகத்துடன் தொடர்புடையவை. 2024 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் மொத்தம் 142 பேர் உயிரிழந்தனர்.
“சிங்கப்பூரில் சாலை பாதுகாப்பு நிலைமை குறித்து MHA தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உட்பட ஆபத்தான ஓட்டுநர் நடத்தைக்கு எதிராக TP தனது அமலாக்க முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது,” என்று MHA குறிப்பிட்டது.
கல்லாங் MRT விபத்து: ஒரு உதாரணம்:
2025 ஜூன் 11-ல், கல்லாங் MRT அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் 85 வயது பெண்மணி உயிரிழந்தார். 68 வயது டாக்ஸி ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, கவனக்குறைவான ஓட்டுதல் (careless driving causing death) குற்றத்தின் கீழ் வருது, இதற்கு அதிகபட்சமாக 3 வருட சிறைத் தண்டனையும், ஓட்டுநர் உரிமத் தடையும் விதிக்கப்படலாம். புதிய சட்ட மாற்றங்களின்படி, இந்த ஓட்டுநர் முதல் முறை குற்றவாளியாக இருந்தால், நீதிமன்றம் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனையை முடிவு செய்யும். இது, பாதிக்கப்பட்டவரின் வயது, விபத்தின் சூழல், மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
“பொறுப்புடன் வாகனம் ஓட்டும் பழக்கத்தை மேம்படுத்தவும், தவறு செய்பவர்களுக்கு சரியான தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்தவும், மற்ற சட்டங்களையும் நாங்கள் இப்போது ஆராய்ந்து வருகிறோம்,” என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க: வெளிநாட்டவருக்கான Training Employment Passes (TEP) முறைகேடு: நிறுவனங்கள் மீது MOM அதிரடி நடவடிக்கை!