TamilSaaga
PSA

2025-ல் சிங்கப்பூரின் கட்டுமானத் துறை நிறுவனங்கள் எவ்வாறு பணியாளர்களை தேர்வு செய்கிறது?

சிங்கப்பூரின் கட்டுமான மற்றும் கப்பல் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

சிங்கப்பூருக்கு தொழிலாளர்கள் வருகின்ற வழிகள்:

1. மனிதவள நிறுவனங்கள்: பல நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களின் தகுதிகளைப் பொருத்தி, சிங்கப்பூரின் வேலை வாய்ப்புகளுடன் பொருத்துகின்றன.

2. நேரடி பணியமர்ப்பு: சில நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றன. இதற்காக அவர்கள் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது தங்களது சொந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

3. அரசாங்க திட்டங்கள்: சிங்கப்பூர் அரசாங்கம் சில திட்டங்களை செயல்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில் தேவைப்படும் தொழிலாளர்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருகிறது. நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளுக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு சரியான திட்டமிடப்பட்ட செயல்முறையாகும். இங்கே சில முக்கியமான நடைமுறைகளை விளக்குகிறோம்: நிறுவனத்தின் இணையதளம்: சில பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகளை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுகின்றன. அங்கே, வேலையாட்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

Agents and Consultancy: பல நிறுவனங்கள் நேரடியாக வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்காக மூலதன நிறுவனங்களை அல்லது ஆட்கள் ஏஜென்சிகளை நம்புகின்றன. இந்த ஏஜென்சிகள் குறிப்பிட்ட திறமைகள் மற்றும் தகுதிகள் கொண்ட வேலையாட்களைத் தேடிக்கொடுத்திடுகின்றன.

உள்ளக பரிந்துரைகள் (Internal Referrals): பல கம்பெனிகள், ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களின் பரிந்துரைகளை நம்பி புதிய வேலையாட்களை அழைக்கின்றன. இது நேரம் மற்றும் செலவுகளை சிக்கனமாக்க உதவுகிறது.

விளம்பரங்கள்: இதுவே இன்றும் மிகவும் பொதுவான முறையாக இருக்கிறது. வேலைவாய்ப்பு விளம்பரங்கள் நிறுவனத்தின் தேவைகளைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துகின்றன.

ஆவண சரிபார்ப்பு: வேலையாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்களின் கற்றல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள், மற்றும் வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இந்த செயல்முறைகள் நிறுவனத்திற்கேற்ப மாறுபடும், ஆனால் இதன் நோக்கம் சிறந்த திறமைகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேவை உள்ளவர்களை ஒன்றிணைப்பதாகும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் Pre Approval பெற்று தொழிலாளர்களை சிங்கப்பூர் அழைத்து வருவர். இப்படித் தான் ஒரு கட்டிடத் தொழிலாளர் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சிங்கப்பூர் வந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முக்கியமான பயிற்சிகளை அவர்கள் முடிக்க வேண்டும். முதலில் Setting-In Program எனப்படும் ஒரு நாள் பயிற்சி. முதல் முறை சிங்கப்பூர் வருபவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் புதிதாக சிங்கப்பூர் வருபவர் என இந்த இரு பிரிவினரும் இந்த பயிற்சி வகுப்பை முடித்தாக வேண்டும். அதில் இங்கு உள்ள பொதுவான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும்.

அடுத்ததாக வேலை தொடர்பான பயிற்சி. இதில் இரண்டு வகை உண்டு அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து

1. Basic Skill Test

2. High Skill Test

சிங்கப்பூர் வரும் Work Permit தொழிலாளர்கள் இந்த பயிற்சியை முடித்த பின்னரே முறையாக பணியமர்த்தப்படுவர். சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் Basic Skill Test என்பது அவர்களின் அடிப்படை திறன்கள் மற்றும் அறிவை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாகும். இந்தத் தேர்வு, அவர்கள் கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பணிபுரியத் தகுதியானவர்களா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இந்த Skill Test பயிற்சியை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் Pre approval எனப்படும் தற்காலிக அனுமதி 2 மாதங்கள் வரை செல்லுபடியாக வேண்டும். சரி எந்தெந்த பயிற்சிகள் கட்டாயம். அது தவிர வேறு எந்தெந்த பயிற்சிகள் உண்டு:

  1. Construction Safety Orientation Course (CSOC)
  2. Apply Workplace Safety and Health in Construction Site

Construction Safety Orientation Course (CSOC): Construction Safety Orientation Course (RC), இது ஒரு எட்டு மணி நேர பயிற்சி வகுப்பு ஆகும். இந்த பயிற்சி வகுப்பை யார் யார் பெறலாம் என்றால், ஏற்கனவே கட்டுமான துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருப்பினும், தங்களுடைய CSOC அல்லது ACS சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பை மேற்கொள்ளலாம். நீங்கள் தொடர்ந்து இந்த கட்டுமான துறையில் ஈடுபட விரும்பினால் இந்த சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். இது ஒரு மறு சான்றிதழ் பெரும் பயிற்சியாகும். இந்த மறு சான்றிதழ் பெற்ற பின் நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் கட்டுமான தொழிலில் ஈடுபடலாம்.

Apply Workplace Safety and Health in Construction Site Apply Workplace safety & health in Construction Sites (ACS) என்ற பாதுகாப்பு பயிற்சி, கட்டுமான தொழிலில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என அனைவரும் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் சுமார் 18 மணி நேரம் நடைபெறும். இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் வேலை பாதுகாப்பில் போதுமான பயிற்சி பெற்றவராக கருதப்படுவர். இது போன்ற பயிற்சி பெறுபவர், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தங்களுடைய பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்ல BCA-Approved skill Test Centre எத்தனை உள்ளது?

இந்தியாவில் மொத்தம் 3 பயிற்சி மையங்கள் BCA-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டுமே உள்ளது.

  1. Hytech Goodwill Training And Testing Centre Private Limited, Chennai
  2. TTJ Test Centre, Telengana
  3. HTTC Overseas Testing and Testing Services Pvt Ltd (Kolkata)

மேற்கண்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மற்றவர்களுக்கு அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு மீண்டும் இந்த செயல்முறை தொடரும். இதற்காக Singapore BCA – Building & Construction Authority உடன் பல கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த பயிற்சிகளை வழங்கி வருது. இந்த பயிற்சிகளுக்கு உங்கள் வேலை நிறுவனம் விண்ணப்பித்துக் கொடுக்கும். இது குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள Building & Construction Authority-ன் அதிகாரப்பூர்வ இணையத்தைப் பார்வையிடுங்கள். https://www1.bca.gov.sg/

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts