TamilSaaga

“சிங்கப்பூரில் இரவு நேர கேளிக்கை விடுதிகள்” : அமலுக்கு வந்த புதிய விதிகள் – முழு விவரம்

சிங்கப்பூரில் கேடிவி குழுமம் மூலம் பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்பட்டதால், நாடு முழுவதும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் அவை மீண்டும் செயல்பட தொடங்கவுள்ள நிலையில் சிங்கப்பூர் அரசு பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE), உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) ஆகியவற்றின் கூட்டு செய்தி அறிக்கையின்படி, இரவு நேர நிறுவனங்களை மையப்படுத்திய கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்வருமாறு..

பிரதான ‘ஹால்’ மட்டுமே செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும்; மற்ற அனைத்து தனி அறைகளும் பூட்டப்பட வேண்டும்.

பூட்டப்பட்ட தனி அறைகளின் நுழைவாயில்கள் உட்பட அனைத்து செயல்பாட்டு பகுதிகளையும் சிசிடிவி- க்கள் பதிவு செய்ய வேண்டும்.

சிசிடிவிகளில் அப்பகுதியில் நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க நிறுவனத்தில் விளக்குகள் போதுமானதாக இருக்க வேண்டும்.

கடையின் உட்புறம் வெளியில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும். சாத்திய சன்னல்கள் அல்லது ஒளிப்புக்காத கதவுகள் இருக்கக்கூடாது.

அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடத்தில் SafeEntry அமல்படுத்தப்பட வேண்டும்.

Related posts