TamilSaaga

“சிங்கப்பூருக்காக போராடும் முன்களப்பணியாளர்கள்” – சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்ட Singapore Post

புதிய தேசிய தின அஞ்சல் தலைகளை வெளியிடுவதன் மூலம் இந்த பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரை தங்களது அயராத பணியினால் பாதுகாக்கும் முன்களப்பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக புதிய அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் 56வது தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் போஸ்ட் சில அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள், துப்புரவு பணியாளர்கள், பேரங்காடியில் உள்ள பணியாளர்கள், ஆசி­ரி­ய பெருமக்கள் உள்ளிட்ட 10 முன்­க­ளப் பணி­யா­ளர் பிரிவினருக்கு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் இன்று முதல் விற்பனையாகும் இந்த அஞ்சல் தலைகள் 30 காசுகள் தொடங்கி 1.40 வெள்ளி வரை விற்பனையாகும்.

கண்ணனுக்கு தெரியாத இந்த எதிரியுடன் போராடும் இந்த முன்கள பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் சிங்கப்பூர் போஸ்ட் இந்த நிகழ்வை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்யாவசிய தேவைக்காக மக்கள் வெளியில் செல்லும்போது இவர்களுடைய தியாகத்தை எண்ணிப்பார்த்து மக்கள் செயல்பட வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது.

இதே போல கடந்த மாதம் சிங்கப்பூர் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் போஸ்ட் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts