TamilSaaga

சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்கள்.. “விரைவில் தளர்வடையும் கட்டுப்பாடுகள்” : அமைச்சர் டான் விளக்கம்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் தனது பணியின் 100வது நாள் நிறைவை வெளிப்படுத்தும் பொருட்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த ஒரு நேர்காணலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பதிலை அளித்தார் அமைச்சர் டான். அவர் கடந்த மே 15ம் தேதியன்று மனிதவள அமைச்சகத்தில் (MOM) பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெரியந்த தொழிலாளர்களின் டார்மிட்டரிகள்

சிங்கப்பூரின் பிற பகுதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டாலும், தீவினுள்ளே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கங்கள் ஏன் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் டான், ஆரம்பத்தில் தங்குமிடங்களில் கட்டுப்பாடுகளை நீக்க MOMக்கு தெளிவான பல திட்டங்கள் இருந்தன என்று குறிப்பிட்டார்.

ஆனால் அவற்றை செயல்படுத்த முற்பட்ட ஒவ்வொரு முறையும் பல சிக்கல்களை மனிதவள அமைச்சகம் எதிர்கொண்டதாக அவர் விளக்கமளித்தார்.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே “மிக அதிக” அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள இந்த நிலையில், தற்போதைய நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தொழிலாளர்களிடையே ஏற்படும் தொற்றுகள் குறித்து அதிக கவனத்தை அதிகாரிகள் செலுத்தி வருகின்றனர் என்றும் கூறினார்.

கடந்த ஆறு வாரங்களில், பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, மேலும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் அறிகுறியற்றவர்களாகவும் இருக்கின்றனர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். தடுப்பூசிகள் சிறந்த முறையில் அவர்களை பாதுகாத்து வருகின்றது என்றார்.

ஆகவே விரைவில் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts