TamilSaaga

சிங்கப்பூர் ஜுராங் துறைமுக பகுதியில் 2 லட்சம் ART கருவிகள் – மக்களுக்கு விநியோகித்த சுகாதார அமைச்சகம்

சிங்கப்பூரில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான Antigen Rapid Test (ART) சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜுராங் மீன்பிடி துறைமுக வர்த்தகத்தால் ஏற்பட்ட கொரோனா தொற்று குழுமத்துடன் தொடர்புடைய கடைகள், சந்தைகள் ஆகிய இடங்களுக்கு சென்று வந்த மக்களுக்காக அவர்கள் தங்களை தாமே சுய பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக சுமார் 2.25 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையில் ART கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக straights times எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜீலை மாதம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இந்த கருவிகளை சுகாதார அமைச்சகம் மக்கள் கழகத்துடன் இணைந்து வழங்கியதாக கூறியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் சோங்பூன், வாம்போ ட்ரைவ் சந்தை மற்றும் உணவு நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் ART கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கொரோனா தொற்று குழுமத்துடன் தொடர்பில் உள்ள இந்த இரண்டு சந்தைகளுக்கும் கருவிகள் வழங்கி சுய பரிசோதனையை சிங்கப்பூர் அரசு மற்றும் சுகாதார அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.

Related posts