TamilSaaga
12

2025 Toto Hong Bao லாட்டரி குலுக்கல்….மெகா பரிசுத் தொகை அறிவிப்பு….கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!

இந்த ஆண்டுக்கான Singapore Poolsன் Toto Hongbao குலுக்கலில் வெற்றி பெறுபவருக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை S$12 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Hongbao டிரா என்பது சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு பிரபலமான புத்தாண்டு டிராவாகும். இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு சிறப்பு டிராவாகும். Hongbao டிராவில் பொதுவாக மிகப்பெரிய பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பல கோடி ரூபாய் வரை பரிசுத் தொகை வழங்கப்படுவதால், இது பலரையும் கவர்ந்து இழுக்கும்.

Singapore Pools நிறுவனம், இந்த ஆண்டுக்கான Hongbao Draw வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த டிராவில் முதல் பரிசு தொகை S$12 million நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த ஹாங்காவு டிராக்களில் இதுவே மிகப்பெரிய பரிசுத் தொகையாகும். சிங்கப்பூரில் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மிக மிக அரிதான வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.

 

சிங்கப்பூர் TOTO-வில் 6 மில்லியன் டாலர் பரிசு!! அடுத்த அதிர்ஷ்டசாலி யார்? – அலைமோதும் மக்கள் கூட்டம்

Hongbao  Draw பங்கேற்பது எப்படி?

சிங்கப்பூர் பூல்ஸ் கடைகள்: சிங்கப்பூர் பூல்ஸ் கடைகளில் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம்.
ஆன்லைன் முறையில்: சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாகவும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

ஹாங்காவு டிராவில் பங்கேற்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

Reunion Draw சீனா புத்தாண்டிற்காக ஐந்து நாட்கள் முன்னதாக, ஜனவரி 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.

25-வது ஆண்டு விழா கொண்டாடும் Hong Bao Draw: 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Hong Bao Draw இந்த ஆண்டு 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. கடந்த சில ஆண்டுகளில், ஹொங் பாவ் சீட்டுகள் சீன புத்தாண்டின் முதல் நாள் முதல் பதினைந்து நாட்களின் மத்தியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டன.

Sinporepools நிறுவனம், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 12 வரையிலான காலகட்டத்தில் இரண்டு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இருப்பதால், பந்தயம் கட்ட போதுமான நேரம் வழங்குவதற்காக, ஹாங்காவு டிரா தேதியை பிப்ரவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என நிர்ணயித்துள்ளது.

Hongbao Draw விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

மேலும் தகவல்களுக்கு: https://www.singaporepools.com.sg/ms/rd25/en/index.html

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts