TamilSaaga

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங் – 3.4 பில்லியன் அளவுக்கு வர்த்தகங்களை பெற்ற Keppel நிறுவனம்.

சிங்கப்பூர் நாட்டில் மிகவும் பிரபலமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங் (Singapore Press Holdings SPH) நிறுவனத்தின் ஊடகத்தை தவிர்த்து மற்ற அனைத்து வகையிலான வர்த்தகங்களையும் சுமார் 3.4 பில்லியன் வெள்ளி அளவிற்கு வாங்க Keppel நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது மேலும் Keppel நிறுவனம் சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பங்கு சந்தையில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் SPH பங்குதாரர்கள் 0.668 ரொக்கத்தையும், ஒரு பங்கிற்கு 0.596 Keppel REIT யூனிட்களையும் 0.782 SPH REIT யூனிட்களையும் பெறுவார்கள். இந்த திட்டம் SPH மற்றும் Keppel பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் உள்ளிட்ட பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டது. “Keppel SPH REIT மற்றும் Keppel REIT ஆகியவற்றில் மீதமுள்ள பங்குகளை ஏறத்தாழ 20 சதவிகிதம் வைத்திருக்கும்” என்று SPH கூறியுள்ளது.

SPH-ன் தலைமை நிர்வாக அதிகாரி Ng Yat Chung, “பல மாதங்களாக நடந்த ஒரு மூலோபாய மறுஆய்வு செயல்முறையின் விளைவு” என்று அவர் கூறினார். “SPH-லிருந்து அதன் இழப்பை நீக்கும் அதே வேளையில், ஊடக வணிகத்திற்கான ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக ஊடக மறுசீரமைப்பின் மூலம் நாங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளோம்” என்று திரு Ng கூறினார்.

Related posts