TamilSaaga

சிங்கப்பூர் டோட்டோ ஜாக்பாட்: திங்கள் கிழமை S$10 மில்லியன் பரிசு!

சிங்கப்பூரில் அடுத்த டோட்டோ குலுக்கல் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 28) இரவு 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் பூல்ஸின் தகவலின்படி, இதன் ஜாக்பாட் பரிசுத்தொகை சுமார் S$10 மில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17, ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முந்தைய மூன்று குலுக்கல்களில் முதல் பரிசு வென்றவர்கள் யாரும் இல்லாததால் பரிசுத்தொகை தற்போது S$10 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்க விரும்பும் நபர்கள், வழக்கமான 6 மணி நேரத்திற்கு பதிலாக, திங்கள் கிழமை இரவு 9 மணி வரை தங்களது பந்தயங்களை வைக்கலாம்.

2025-ல் தொடரும் பெரிய ஜாக்பாட் குலுக்கல்கள்!

தொடர்ந்து மூன்று குலுக்கல்களில் முதல் பரிசு வென்றவர்கள் யாரும் இல்லாத நிலையில் நடைபெறும் இந்த ஏப்ரல் 28ஆம் தேதியின் குலுக்கல், 2025ஆம் ஆண்டின் முதல் பெரிய ஜாக்பாட் குலுக்கல் அல்ல.

ஒருவேளை எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெறும் குலுக்கலிலும் முதல் பரிசு வென்றவர் யாரும் இல்லையென்றால், டோட்டோ விளையாட்டு விதிகளின்படி, அந்த பரிசுத்தொகை இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

முன்னதாக, மார்ச் 6ஆம் தேதி நடைபெற்ற பெரிய ஜாக்பாட் குலுக்கல், 2025ஆம் ஆண்டில் டோட்டோ ஜாக்பாட் S$10 மில்லியன் தொகையை எட்டிய நான்காவது முறையாகும்.

இதற்கு முன், ஜனவரி 3 (S$11.7 மில்லியன்), ஜனவரி 24 (S$13.3 மில்லியன்) மற்றும் பிப்ரவரி 7 (S$12.6 மில்லியன்) ஆகிய தேதிகளில் நடைபெற்ற குலுக்கல்களில் முதல் பரிசுத்தொகை இந்த அளவைத் தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்கக்கூடும்! உங்கள் அதிர்ஷ்டத்தை திங்கள் கிழமை இரவு 9 மணிக்குள் பரிசோதித்துப் பாருங்கள்!

சிங்கப்பூர் TOTO: இந்த மாதத்தின் கடைசி குலுக்கல்! S$4,500,000 பரிசு வெல்லும் வாய்ப்பு!

Related posts