உலக அளவில் பெருந்தொற்று பரவல் காரணமாக பல முக்கிய தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது. அதேபோல சிங்கப்பூரிலும் நோய் பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் இஸ்தானா எனப்படும் பிரதமர் மாளிகை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரின் தேசிய தினம் வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு இஸ்தானா திறக்கப்படும் என்று கடந்த ஜூலை 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. சென்ற மே மாதம் மே தினத்தையம் நோன்பு பெருநாளையும் முன்னிட்டு அது பொதுமக்களுக்காக திறப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்நேரத்தில் நோய் பரவலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அது திறக்கப்படவில்லை. அதற்காக நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டவர்களை அடுத்த மாதம் முதல் தேதி வருகை தருமாறு அழைப்பு விஇந்நிலையில் டுத்தது இஸ்தானா.
மேலும் நோய் பரவலை தடுக்கும் பட்சத்தில் இஸ்தானாவில் வழக்கமான கலைநிகழ்ச்சிகள் வழிகாட்டு சுற்றுலாக்கள் உணவு பானங்கள் போன்றவற்றை செயல்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் மறுதேதி அறிவிக்காமல் இஸ்தானா திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.