தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு மாதத்துக்கு தோராயமாக 500 ஊழியர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அதில், 499 பேர் ஏஜெண்ட்ஸ் மூலமாகத் தான் வருகிறார்கள். இதுதான் மறுக்க முடியாத உண்மை. இதை பயன்படுத்தி, போலி ஏஜெண்ட்டுகள் பலர், வேலைத் தேடுபவர்களை ஏமாற்றி காசு பார்க்கும் விஷயமும் நாம் அறிந்த ஒன்றுதான். சொல்லப்போனால் உங்களில் சிலர் இப்படி ஏமாந்த அனுபவத்தை நிச்சயம் கடந்து வந்திருப்பீர்கள்.
சரி நீங்கள் வேலைக்காக அணுகும் ஏஜென்ட் உங்கள் வேலைக்காக அப்ளை செய்துள்ளாரா என்பதை IPA வந்தபிறகு நம்மால் எளிமையில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் IPA நம் கைக்கு வரும் முன்பே நமது வேலைக்கு அப்ளை செய்துள்ளார்களா? இல்லையா என்பதைப் வருவதற்கு முன்பே எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
எந்த வகை தொழிலாளர்கள் இந்த சோதனையை செய்ய முடியும்?
IPA வரும் முன்பே Work Permit, PCM மற்றும் Shipyard பெர்மிட்டில் சிங்கப்பூர் வரும் அனைத்து தொழிலாளர்களும் தங்கள் வேலைக்கு Apply செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
MOMன் இணையதளம்
MOMன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவைப்பாடும் அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
இந்நிலையில் MOMன் குறிப்பிட்ட இந்த லிங்கை பயன்படுத்தி உள்ளே சென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பதுபோல ஒரு வெப் பேஜ் திறக்கும்.
அதன் பிறகு Check work pass and application statusஐ கிளிக் செய்து உள்ளே செல்லும்போது உங்களுக்கு விருப்பமான மொழியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தமிழிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு உங்கள் Date of Birth மற்றும் பாஸ்போர்ட் நம்பரை பயன்படுத்தி உங்கள் வேலைக்கு Apply செய்யப்பட்டுள்ளதா? உங்கள் Application Status என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த வகையில் உங்கள் பாஸ்போர்ட் நம்பரை வைத்து நீங்கள் எளிதில் பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
PENDING
நீங்கள் உங்கள் DOB மற்றும் பாஸ்போர்ட் எண்ணை பயன்படுத்தி உள்ளே செல்லும்போது Pending என்ற Status வந்தால் சிங்கப்பூர் உங்கள் வேலைக்கு MOMல் Apply செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் உங்கள் தகவல்களை கொடுத்ததும் PENDING, INVALID மற்றும் VALID போன்ற இதுவே திரையில் தோன்றவில்லை என்றால் உங்கள் Application ஏஜென்ட்டால் விண்ணப்பிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
INVALID
உங்கள் Application INVALID என்று வந்தால் உங்கள் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம், உடனே நீங்கள் உங்கள் ஏஜென்ட்டை அணுகலாம்.
VALID என்று வந்தால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இந்த வகையில் நீங்கள் உங்கள் சிங்கப்பூர் வேலை பற்றி அறிந்துகொள்ளலாம்.