சிஙகப்பூரில் அதிகபட்ச சம்பளத்தில் வேலை தரும் SPass ஊழியர்கள் எல்லாருக்குமே EPassல் மாறா வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி மாற என்ன செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவு எடுத்த பலருக்கும் இருக்கும் பட்டியல் நாடுகளில் முக்கிய இடம் பிடித்தது சிங்கப்பூர் தான். அவர் அவரின் கல்வி தகுதிக்கு ஏற்ப, பல வொர்க் பாஸ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அதிகபட்ச சம்பளத்தினை கொடுக்கும் குறிப்பிடத்தக்க ரெண்டு பாஸ் SPass மற்றும் EPass.
SPass ஊழியர்கள்:
படித்த டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களால் சிங்கப்பூரில் spassக்கு அப்ளே செய்ய முடியும். குறிப்பிட்ட துறையில் உங்களுக்கான ஏஜென்ட் உங்களுக்கான SPassஐ அப்ளே செய்வார். சிங்கை மனிதவளத்துறை அப்ரூவ் செய்வதற்கு முன், Self assessment tool என்னும் SATஐ நீங்களே செக் செய்து கொள்ள முடியும். அதிலேயே, உங்களுக்கு SPass அப்ளே ஆகுமா? இல்லையா? எனத் தெரிந்து விடும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை இல்லாமல் நேரடியாக வந்து டெஸ்ட் அடிக்கலாம்.. Social visit பாஸ் இருக்கு… வெறும் 1 லட்சத்திற்குள் முடித்து விடலாம்… ஆனா?
சம்பளமாக 3300 சிங்கப்பூர் டாலரில் தொடங்கி அதிகபட்சமாக 4500 சிங்கப்பூர் டாலர் கூட சம்பளம் கொடுக்கப்படும். ஆனால் நீங்கள் வேலைக்கு சேரும் கம்பெனியினை பொறுத்து இதில் மாறுபாடு உண்டாகும்.
EPass ஊழியர்கள்:
SPassல் இருக்கும் அதிகப்பட்ச தகுதிகள் இதற்கும் பொறுந்தும். இந்த பாஸுக்கும் SATல் செக் செய்ய முடியும். EPassல் வேலைக்கு சேரும் போது அதிகபட்ச சம்பளமே 5000 சிங்கப்பூர் டாலரில் இருந்து கொடுக்கப்படும். இதில் SPassல் வேலை செய்யும் பலருக்கும் EPassக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
நீங்கள் spassல் வேலை செய்து கொண்டே உங்களால் வேறு வேலை தேட முடியும். அப்படி தேடும் போது உங்களுக்கு EPassல் வேலை கிடைக்கும். அப்படி ஒரு கம்பெனி கிடைக்கும் போது அவர்கள் உங்களுக்காக EPass அப்ளே செய்வார்கள். அந்த பாஸ் வரும்வரை SPassஐ கேன்சல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல தயாரா? வெளியாக இருக்கும் புதிய SPass Quotaகள்… சம்பள உயர்வு… MOM சொன்ன புதிய அறிவிப்புகள் என்ன?
EPass அப்ரூவ் ஆவதற்கு முன்னரே பழைய கம்பெனியிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். வேலையை ரிசைன் செய்து நோட்டீஸ் காலத்தில் பணியாற்ற வேண்டும். இது கம்பெனிக்கு ஏற்ப 7ல் இருந்து 14 நாட்கள் வரை இருக்கும். சில நிர்வாகம் ஊழியரை ஒரு மாதம் கூட வைத்து இருக்கும். பின்னர் Epassல் மாறிக்கொள்ள முடியும்.
உங்களின் SPass கேன்சல் ஆகிவிடும். இதற்காக கம்பெனி நிர்வாகம் MyCareersFuture வேலைக்கான வெப்சைட்டில் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை.