TamilSaaga

சிங்கப்பூரின் ‘Dtal Technologies’.. 5,000 டாலர் வரை சம்பளம் – ஏஜெண்டுகள் குறுக்கீடு இல்லாமல் ஆன்லைனிலேயே விண்ணப்பிப்பது எப்படி?

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சாஃப்ட்வேர் நிறுவனமான ‘Dtal Technologies’ நிறுவனம் சாப்ட்வேர் இன்ஜினீயர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறது… சுமார் 5,000 டாலர் வரையிலான மாத ஊதியம் பெறும் வேலைக்கு ஏஜெண்டுகள் குறுக்கீடு இல்லாமல் ஆன்லைனிலேயெ எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க…

‘Dtal Technologies’

சிங்கப்பூரின் ’Shenton Way’ பகுதியில் இருக்கும் நிறுவனம் இது. தொழில் நிறுவனங்கள் வியாபாரரீதியாக எப்படி தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தலாம் எனபதற்கு சாப்ட்வேர் மூலம் தீர்வுகளைக் கொடுப்பது இந்த நிறுவனத்தின் பிஸினஸ் மாடல். வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டு டிஜிட்டலாக ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சேவைகளை எப்படி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் பிரதானமான வணிகம். ’Innovation’ மற்றும் ‘Creative’ ஆன ஒரு சூழலில் உங்களுக்கு சவால்களை எதிர்க்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா… உங்களுக்கான சரியான களத்தை ‘Dtal Technologies’ நிறுவனம் அமைத்துக் கொடுக்கும் என்கிறார்கள்.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் டிஜிட்டலில் உங்கள் கரியரைத் தொடங்க சரியான வாய்ப்பையும் அதற்கான அனுபவத்தையும் வழங்குகிறது. சிங்கப்பூரில் இருக்கும் ’GRAB’, ’BNP Paribas’, ‘Amazon Web Services’, ‘Prudential Star Hub’, ‘AIMS’ போன்ற பல்வேறு நிறுவனங்களுக்குப் பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் தொடங்கி மருத்துவ சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டலாக ஆன்லைன் சேவைகள் முதல் அப்ளிகேஷன்கள் வரை பல்வேறு வசதிகளை இந்த நிறுவனம் செய்துகொடுக்கிறது.

மேலும் படிக்க – “ரத்தக்களரி”! சிங்கப்பூரில் பெண் தோழியுடன் வந்தவரின் மண்டையை இரக்கமின்றி உடைத்த மர்ம நபர் – உச்சி தலையில் “20 தையல்”

இந்த நிறுவனம் பற்றிய கூடுதல் தகவல்களை ’https://www.dtaltechnologies.com/’ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

எங்கே இருக்கிறது?

‘Dtal Technologies’ நிறுவனத்தின் முகவரி – 3 Shenton Way, #09-05, Singapore 068805

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் – +65 9160 2448

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த நிறுவனத்தில் கல்வித்துறை சார்ந்த சேவை வழங்கும் புராஜக்ட் ஒன்றுக்கான சாப்ட்வேர் இன்ஜினீயர் பணியிடம் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த வேலைக்கு 3,800 முதல் 5,000 டாலர்கள் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் ‘Dtal Technologies’ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்ற நீங்கள் விரும்பினால், நிறுவனத்தின் இணையதள முகவரியான ‘https://www.dtaltechnologies.com/’ சென்று ‘Join Us’ பட்டனைச் சொடுக்கலாம். அதன்பிறகு விரியும் திரையில் வழிகாட்டியபடி விண்ணப்பிக்க முடியும். அதேபோல், உங்களது ‘Resume’-ஐ ‘Creative’ ஆக டிசைன் செய்து அந்த நிறுவனத்தின் இ-மெயில் முகவரியான ’contact@dtaltechnologies.com’-க்கு அனுப்பலாம். உங்களது படிப்பு மற்றும் வேலைத்திறனுக்கு ஏற்ற பணியிடங்கள் அங்கு இருந்தால், அந்த நிறுவனம் சார்பில் உங்களை உடனே தொடர்புகொள்வார்கள். உங்களது ரெஸ்யூமில் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts