TamilSaaga

சிங்கப்பூரில் உற்பத்தி ஆலையை விரிவுப்படுத்தும் Global Foundries நிறுவனம்.. 5 பில்லியன் வெள்ளி முதலீடு

அமெரிக்காவை சார்ந்த Computer Chip தயாரிக்கும் பிரபல நிறுவனமான Global Foundries. சிங்கப்பூரில் தனது மிகப்பெரிய விரிவாக்க பணியை துவங்கியுள்ளது.

உலகளவில் Coputer Chip-களுக்கான தேவை அதிகரித்து காணப்படும் சூழலில் சுமார் 5 பில்லியன் வெள்ளி செலவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை முன்னெடுத்துள்ளது இந்த நிறுவனம்.

வருகின்ற 2023 ஆம் ஆண்டு வாக்கில் விரிவாக்க பணிகள் முடிவடைந்து உற்பத்தியை இந்த நிறுவனம் துவங்க உள்ளது. ஏற்கனவே 4800க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரும் சூழலில் விரிவாக்கத்திற்கு பிறகு தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என மேலும் 1000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தால் இதன் Chip உற்பத்தியானது 4.5 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டக்கூடும் என்றும் முந்தைய உற்பத்தியை விட 40 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

இதை பற்றி வர்த்தக உறவுகளின் அமைச்சர் திரு.ஈஸ்வரன் அவர்கள் ” சிறு,குறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு இந்த முதலீடு பயனளிக்கும்” என்று கூறினார்.

Related posts