TamilSaaga

14 கால்கள்.. திகைக்க வைத்த ராட்சத கரப்பான் பூச்சி.. உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய சிங்கப்பூர்!

சிங்கப்பூர் ஆய்வாளர்கள் எப்போதுமே ‘துறுதுறு மைண்ட் செட் உடையவர்கள். உலகத்தின் வல்லரசு நாடுகள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நோக்கி முன்னோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தால், எது என்ன என்பதை கண்டறிந்து சிங்கப்பூர் பத்தடி பாயும். டெக்னாலஜியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சிங்கப்பூர் நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையிலேயே தங்களது செயல்பாடுகளை நகர்த்தி வருகிறது.

அதன் மிக சமீபத்திய சான்று, செயற்கை கோழி தயாரிப்பு. ஆம்! சிக்கன் சாப்பிடுவதற்கு கோழியை கொல்ல தேவையில்லை என்ற புதிய ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கும் சிங்கப்பூர், அதற்கான அனுமதியையும் கொடுத்துள்ளது.

சிங்கப்பூரின் Nanyang Technological பல்கலைக்கழகத்தை (NTU) தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பல்கலையும், சிங்கப்பூரின் கோழிகள் வளர்ப்பு நிறுவனமான Leong Hup-ம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, இரு தரப்பும் இணைந்து, கோழிப்பண்ணைகளில் அறுக்கப்படும் கோழிகளின் கழிவுகளை மறு ஆக்கம் செய்து, உருப்படியாக என்ன தயாரிக்க முடியும்? என்பதை கண்டறியப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது, கோழியின் இரத்தம், கழிவுகள் உள்ளிட்டவற்றை வீணாக்காமல் அதன் மூலம் ஆய்வகத்திலேயே இறைச்சியை உருவாக்குவது எப்படி? என்று ஆராய்ந்து வருகின்றனர். அதாவது, ஆங்கிலத்தில் இதனை lab-grown meat என்று சொல்வார்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்று (அக்.31) நடந்த குலுக்கலில் 3 பேருக்கு தலா 69 லட்சம் பரிசு! 16 கோடி போனாலும் 69 லட்சம் என்ன சும்மாவா!

இந்த ஆராய்ச்சியை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்து வந்தாலும், சிங்கப்பூரும் அதனை தற்போது கையிலெடுத்துள்ளது. அந்தளவுக்கு நமது சிங்கை ஆராய்ச்சியாளர்கள் உலக நாடுகளுக்கு சவாலாக விளங்குகின்றனர்.

அதுபோல், மற்றொரு புதிய கண்டுபிடிப்பை சிங்கை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். ஆம்! கடந்த 2020-ல் நமது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து கடல் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். குறிப்பாக, சுமார் 14 நாட்கள் மேற்கு ஜாவா கடற்கரையில் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்களை அவர்கள் சேகரித்தனர். அப்போது, யாருமே எதிர்பார்க்காத வகையில், 14 கால்களுடன் கூடிய பெரிய கரப்பான் பூச்சி மாதிரியான கடல் உயிரினத்தை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த உயிரினம் பார்ப்பதற்கு அப்படியே கரப்பான்பூச்சி போலவே இருந்தது. மொத்தம் 14 கால்கள் அதற்கு இருந்தது. இதனால் ஒரு ராட்சத கரப்பான் போல அது தோற்றமளித்தது. இந்த உயிரினத்திற்கு ‘பாத்தினோமஸ் ரக்சசா’ (Bathynomus Rakasa) என்று பெயரிட்டுள்ளனர்.

இதற்கு பல கண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts