சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் உள்ள சுமார் 1,000 முதியவர்கள் மற்றும் குடிமக்களுக்கு Temasek அறக்கட்டளை வழங்கும் இலவச சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசிகளுக்குப் பதிவு செய்யலாம். மெர்டேக்கா மற்றும் பயோனீர் ஜெனரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் நீல மற்றும் ஆரஞ்சு Community Health Assist Scheme கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவை அளிக்கப்படும் என்றும் அதிலும் குறிப்பாக முதலில் பதிவு செய்யும் 1000 பேருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக களமிறங்கிய பெருமாள் ராகுல் காந்தி
சினோஃபார்ம் தடுப்பூசி, சினோவாக் தடுப்புசி போன்றது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க உதவுகின்றது. ஆர்வமுள்ளவர்கள், வடகிழக்கு மருத்துவக் குழுவின் கீழ் செயல்படும் கல்லாங், புனா விஸ்டா, பெடோக் மற்றும் புக்கிட் பாடோக்கில் உள்ள நான்கு நியமிக்கப்பட்ட கிளினிக்குகளில் ஒன்றிற்குச் செல்லலாம் என்று டெமாசெக் அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழுவில் உள்ள திருமதி. ஹோ சிங் நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“1,000 பேருக்கு இலவச சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இது போதுமானது” என்று அக்டோபர் 1 ஆம் தேதி டெமாசெக் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகிய திருமதி ஹோ கூறினார். 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் ஆன்டிபாடி பதிலை அளவிட இரத்த மாதிரிகள் எடுக்கப்படும் ஒரு ஆய்வில் பங்கேற்கலாம் என்றும் திருமதி ஹோ கூறினார். தேசிய தடுப்பூசி திட்டத்தின் (NVP) கீழ் அங்கீகரிக்கப்படாததால், சினோபார்ம் தடுப்பூசியை எடுத்துக்கொள்பவர்கள் தடுப்பூசி பாதிப்பு நிதி உதவித் திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
சினோபார்ம் தடுப்பூசி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டதிலிருந்து தனியார் சுகாதார நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இது பொதுவாக இரண்டு டோஸ்களுக்கு 100 வெள்ளிக்கும் குறைவாகவே விலை நிர்ணயம்பட்டது.