சிங்கப்பூரை பொறுத்தவரை பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்று சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது சிங்கப்பூர் அரசு. மேலும் அந்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கும் அவர்களது பணிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது அந்த பதிவில், “உங்களிடம் பணிபுரியும் புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்(கள்) வேறு எந்த வீடுகளுக்கும் வேலை செய்வது அல்லது சொந்தமாக வியாபாரம் செய்வது சட்டவிரோதமானது”.
மேலும் இந்த நடவடிக்கையானது தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு போதுமான ஓய்வு இருப்பதை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது”.
“சட்டவிரோதமாக பணியாளர்கள் வேலை செய்யும்போது, அவர்கள் காயமடைந்தால், அதற்கான மருத்துவ கட்டணத்தை முதலாளிகளான நீங்கள் ஏற்க வேண்டும். மேலும் சட்டவிரோதமாக வேலை செய்கிறபட்சத்தில் பணியாளர்களின் பணி அனுமதி ரத்து செய்யப்படும்”. மேலும் பணியாளர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற தடை விதிக்கப்படும்”
ஆகவே பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு பணி வழங்குவோர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.