GSTV என்பது 2012-ம் ஆண்டு பட்ஜெட்டின் பொழுது சிங்கப்பூரில் கொண்டுவரப்பட்டது. இதன்படி மக்கள் வாங்கும் பொருள்கள் மீதான சேவை வரியிலிருந்து குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டது.
இதன் மூலம் கிடைக்கும் தொகை மக்களின் சேவை வரிப் பளுவை சற்று குறைக்க உதவிடும்.
வருடம் முழுக்க சேவை வரி செலுத்துபவர்களுக்கு சிறிய ஊக்கத்தொகையாகவும் இது இருக்கும்.
இந்த வருடம் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த பணம் ஏறத்தாழ 1.5 மில்லியன் சிங்கப்பூர் மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இதில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. GSTV-Cash மற்றும் GSTV-MediSave.
இதன் மூலம் S$450 அல்லது S$850 டாலர்கள் பணம் மக்களுக்கு அளிக்கப்படும். இது தவிர MediSave Vouchar-ல் S$150, S$250, S$350 என மூன்றில் ஏதேனும் ஒரு தொகை அவர்களின் Central Provident Fund MediSave account-ல் செலுத்தப்படும்.
இதற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள்? யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? MediSave-ல் எவ்வளவு பணம் யாருக்கு கிடைக்கும்?
முதலில் GSTV- Goods Service Tax Voucher
இந்த பணத்தைப் பெறுபவர்கள் 2024-ல் 21 வயதை எட்டியிருக்க வேண்டும்.
அவர்கள் சார்ந்த குடும்பத்தில்ஸ் சென்ற ஆண்டு வருமானம் S$34000-க்குள் இருந்திருக்க வேண்டும்.
ஒன்றிற்கும் மேற்பட்ட சொத்துக்கள் இருக்க கூடாது.
தங்கியிருக்கும் வீட்டின் வருடாந்திர மதிப்பு S$25000 டாலர் வரை மட்டுமே இருக்க வேண்டும்.
யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?
GSTV -Cash: வீட்டின் கடந்த வருட மதிப்பு S$21000 அல்லது அதற்குள் இருந்தால் S$850 டாலர். S$21000-க்கு மேல் S$25000-க்குள் இருந்தால் S$450.
GSTV-MediSave: 65 முதல் 74 வயது வரை உள்ளவர்களுக்கு வீட்டின் கடந்த வருட மதிப்பு S$21000 அல்லது அதற்குள் இருந்தால் S$250 டாலர். S$21000-க்கு மேல் S$25000-க்குள் இருந்தால் S$150.
75 முதல் 84 வயது வரை உள்ளவர்களுக்கு வீட்டின் கடந்த வருட மதிப்பு S$21000 அல்லது அதற்குள் இருந்தால் S$350 டாலர். S$21000-க்கு மேல் S$25000-க்குள் இருந்தால் S$250.
85 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வீட்டின் கடந்த வருட மதிப்பு S$21000 அல்லது அதற்குள் இருந்தால் S$450 டாலர். S$21000-க்கு மேல் S$25000-க்குள் இருந்தால் S$350.
இந்த Voucher தொகைகளைப் பெற இதற்கான அதிகாரபூர்வ தலத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை விண்ணப்பம் செய்யாதோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://www.govbenefits.gov.sg/
முக்கியக் குறிப்பு : இந்த தொகை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே