ஹரியானா மாநிலம் Gurugram-ஐ சேர்ந்த ADVenTureS OVERLAND எனும் நிறுவனம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். விமானங்களுக்கு இணையாக சகல வசதிகளுடன் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மியான்மர், தாய்லாந்து, மலேசியா வழியாக இந்த பேருந்து சிங்கப்பூர் சென்றடைகிறது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து கிளம்பும் இந்த பேருந்து மியான்மரின் Bagan, yangon நகரங்கள் வழியாகவும், தாய்லாந்தில் பாங்காக் வழியாகவும், மலேசியாவில் கோலாலம்பூர் வழியாகவும் பயணிக்கிறது. முதலில் வருபவர்களுக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங்கில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த பேருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது. அதுமட்டுமின்றி, இதே நிறுவனம் இந்தியாவில் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவையை இயக்கி வருகிறது.
இந்த பேருந்து 18 நாடுகள் வழியாக 20,000 கிலோ மீட்டர் பயணித்து 70 நாட்களில் லண்டன் சென்றடையும். உலகிலேயே மிக நீளமான பேருந்து சேவையாக டெல்லி – லண்டன் பயணம் அமைந்துள்ளது.
இவ்வளவு தூரம் ஒரு மனிதரால் பொறுமையாக பயணிக்க முடியுமா? என்றால் 100-க்கு 80 சதவிகிதம் பேர் சொல்லும் பதில் ‘வாய்ப்பில்லை ராஜா’ என்பது தான்.
எனினும், மீதமுள்ள 20 சதவிகிதம் இந்த பயணத்தை ரசிக்க தயாராக உள்ளனர் என்பதே உண்மை. இவர்கள் டூர் செல்திலும், இயற்கையை ரசித்துக் கொண்டே உலகைச் சுற்றி வரும் பிரியர்களாக இருப்பார்கள். இந்த 20 சதவிகித மக்களே இந்நிறுவனத்தின் டார்கெட்.
இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதமும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோல், 2022 டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பேருந்து அதே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
டிக்கெட் கட்டணம், பயண தேதி உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள,
Adventures Overland Pvt. Ltd.
1023, Tower B4, 10th Floor, Spaze i – Tech Park
Sohna Road, Gurugram – 122018
Haryana (India)
info@bustosingapore.com
+91 9999981128, +91 8826263956