சிங்கப்பூரில் உள்ள தங்கள் நிறுவனத்தின் 19 கடைகளும் பிப்ரவரி 23 முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று அமெரிக்காவின் பிரபல Dunkin’ Donuts அறிவித்துள்ளது.
நேற்று (பிப்ரவரி 22) அன்று Dunkin நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“operational issues” காரணமாக கடைகள் மூடப்படும் என்றும் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் குழுவின் ஆரோக்கியமே தங்களின் “மிக முக்கிய முன்னுரிமை” என்றும் Dunkin’ தெரிவித்துள்ளது.
மேலும் “அடுத்த அறிவிப்பு வரும் வரை சிங்கப்பூரின் அனைத்து கடைகளும் மூடப்படும்” என்று கூறியுள்ளது.
மீண்டும் திறக்கும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் “குறைந்தது ஒரு வார காலத்திற்கு சிக்கல் நீடிக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“அன்புள்ள மதிப்புமிக்க வாடிக்கையாளர்களே,
எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் குழுவின் ஆரோக்கியமே எங்களின் முதன்மையான முன்னுரிமை.
செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக நாளை பிப்.23 முதல் எங்களது கடைகள் தற்காலிகமாக மூடப்படும். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பாதுகாப்பாக இருங்கள், விரைவில் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயாராக இருப்போம்!
அன்புடன்,
டங்கின் சிங்கப்பூர்
என்று குறிப்பிட்டுள்ளது.