TamilSaaga
Air India Express Launches Direct Flights from Mangaluru to Singapore

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: உங்களை சிங்கப்பூருக்கு நேரடியாக அழைத்துச் செல்லும் !

21 ஜனவரி 2025 முதல், மங்களூரு சர்வதேச விமான நிலையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மங்களூரு மற்றும் சிங்கப்பூர் இடையே நேரடி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

மங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனி சிங்கப்பூருக்கு நேரடியாக பயணம் செய்யலாம். இது தொழில், சுற்றுலா மற்றும் குடும்பம் சார்ந்த பயணங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இணைக்கப்படும் முதல் தென்கிழக்கு ஆசிய சர்வதேச துறைமுகம் சிங்கப்பூர் ஆகும்.

வாரத்தில் இரண்டு முறை, செவ்வாய்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த விமான சேவைகள், தொழில்துறை மற்றும் பயணத்திற்கான சிறந்த நேர திட்டத்தை வழங்குகின்றன.

விமான நேர அட்டவணை:

  • IX862: மங்களூருவிலிருந்து காலை 5:55 மணிக்கு புறப்படும் விமானம், சிங்கப்பூரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:25 மணிக்கு சென்று சேரும்.
  • IX861: சிங்கப்பூரிலிருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:25 மணிக்கு புறப்பட்டு, மங்களூருவில் மாலை 4:55 மணிக்கு திரும்பி வரும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX), டாடா குழுமத்தின் குறைந்த கட்டண விமான சேவை (LCC), மங்களூரு (IXE) மற்றும் சிங்கப்பூர் (SIN) இடையிலான நேரடி விமான சேவைகளை தொடங்கி, அதன் சர்வதேச பரப்பினை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த புதிய விமான சேவை இரு பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். இது இரு பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மங்களூருவிலிருந்து டெல்லி மற்றும் புனேக்கு புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 ஜனவரி 2 முதல், மகாராஷ்டிராவின் ஐ.டி. மையமான புனேவுக்கு புதிய நேரடி விமான சேவை தொடங்கப்படும்.

Air India Express Launches Direct Flights from Mangaluru to Singapore

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts