சிங்கப்பூரில் 60 வயது முதியவரை மலைப்பாம்பு கடித்த சம்பவம் திகழ்ந்துள்ளது. நம் இந்தியாவில் புல்வெளிக்கு அருகில் வீடு இருந்தால் பாம்புகள் பூச்சிகள் போன்றவை கண்ணில் தென்படுவது சாதாரணமான விஷயம் தான். அதையும் தாண்டி பாம்புகளை கடவுளாக வழிபடும் பழக்கம் இந்தியாவில் உண்டு. ஆனால் சிங்கப்பூரில் அப்படி அல்ல. எப்பொழுதாவது அரிதாக தான் பாம்பு போன்றவை கண்ணில் தோன்றும்.
இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி சிங்கப்பூரின் காபி ஷாப் அருகில் உள்ள வாய்க்காலில் இரண்டரை மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது.அந்த பாம்பு கடைக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வடிகால் மூடியினை நீக்கி அதனை பிடித்தனர். அப்பொழுது அறுபது வயது முதியவர் ஒருவர் மலைப்பாம்பை தொட்டுப் பார்க்க அருகில் சென்றார். அவரது கையை அருகில் கொண்டு சென்ற பொழுது பாம்பு அவரை கொத்தி உள்ளது. இந்த சம்பவம் இரவு சுமார் 8. 45 மணியளவில் நடைபெற்றதாக சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை தெரிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூரின் விலங்குகள் நல அமைப்பு மலைப்பாம்பை சைசாக பிடித்தது. அதற்குப் பின்னர் மலைப்பாம்பின் மீது சி ப் பொருத்தப்பட்டு விடப்பட்டது .பாம்புகளை பொருத்தவரை அவைகள் மனிதர்கள் இருக்கும் இடத்தை விட்டு தள்ளியே இருக்க விரும்பும். அதையும் தாண்டி அதனை சீறும் பொழுது அது தன்னை காப்பாற்றி கொள்வதற்காக மனிதர்களை தாக்கும் விலங்குகள் நல அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். வனவிலங்குகளை கண்டால் பொதுமக்கள் அதனை தாக்காமல் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.