TamilSaaga

சிங்கப்பூர் VTL திட்டம்… ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்துக்கும் அனுமதி – முழு விவரங்கள்

சிங்கப்பூர் அதன் தனிமைப்படுத்தல் இல்லாத தடுப்பூசி பயண பாதை (VTL) திட்டத்தை நவம்பர் 8 முதல் ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கு விரிவுபடுத்துகிறது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இருவழிப் பயணம் அதன் தற்போதைய எல்லை நடவடிக்கைகளின் காரணமாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 26) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கான சிங்கப்பூரின் VTL ஆனது, ஆஸ்திரேலியாவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை, பயணத்தின் அனைத்து நோக்கங்களுக்காகவும் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கும்” என்று CAAS தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் அதிகமான பயணிகளுக்கு மீண்டும் திறக்க இருப்பதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

“அவுஸ்திரேலியா நுழைவதற்கான ஏற்பாட்டை முடித்த பிறகு, சிங்கப்பூரில் இருந்து மாணவர்கள் மற்றும் வணிக பாஸ் வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று நேற்று CAAS தெரிவித்துள்ளது.

“சிங்கப்பூரில் இருந்து பிற பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய முடியாது.”

தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைத் திட்டத்தின் கீழ், பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் கடந்த 14 நாட்களில் VTL நாடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts