சமீப காலமாக சமூக வலைதளலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் சில காரியங்களை மாணவர்கள் மத்தியில் மறைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது.
சமூக வலைத்தளங்கள் மீதான மோகம், பெருகி வரும் வியாபார நோக்கம் இதற்க்கு இடையே பெரும் போரே நடந்து வருகிறது. ப்ரோமோஷன் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஒரே பதிவை மீண்டும் மீண்டும் போடுவது, மக்களுக்கே தெரியாமல் அவர்கள் மனதில் ஒரு ஆர்வத்தைத் தூண்டுவது போன்றவை பரவலாகசெய்யப்பட்டு வருகிறது.
ஒரு பாட்டு ஹிட் ஆகா வேண்டுமானால் வெவ்வேறு பிரபலங்களை வைத்து மீண்டும் மீண்டும் அதை பதிவிடச் செய்வது. அந்த பதிவை கோடிக் கணக்கான மக்கள் பகிர்வது, இறுதியில் அனைவரது மனதிலும் அந்தப் பாடல் அவர்களுக்கே தெரியாமல் ரிப்பீட் மோட்-ல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
அப்படி ஒரு காரியம் தான் மலேசியாவில் அரங்கேறி உள்ளது. பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சமீப காலமாக உலகம் முழுவதும் ஹிட்-ஆகி டாப் ட்ரெண்டிங்-ல் ஒலித்துக் கொண்டிருக்கும் “Apt, Apt, Apt” என்ற பாடலை ஒரு மாணவன் விடையாக எழுதி உள்ளான்.
தென்கொரியாவைச் சேர்ந்த Blackpink என்ற இசைக் குலுவைச் சார்ந்த ரோஸ் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த பிரபலப் பாடகரான புருனோ மார்ஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளது தான் இந்தப் பாடல். இது உலகம் முழுவதும் டாப் ட்ரெண்டிங் பாடலில் ஒன்றாக தற்பொழுது வளம் வந்துகொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் இந்தப் பாடலைத் தான் அந்த மாணவனும் முழுதாக எழுதியுள்ளான்.
அவனது ஆசிரியர் இதனை Tik Tak செயலியில் பதிவிட்டு தனது வருத்ததைத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு சரியான கல்வியைக் கற்பிக்க நாங்கள் கடினமாக உழைக்கிறோம் இருப்பினும் இது போன்ற செயல்கள் வருத்தத்தைக் கொடுப்பதாக அந்த மாணவனின் விடைத் தாளைப் பகிர்ந்து தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
மாணவனின் இந்தச் செயலுக்கு சமுக வலைத்தளங்கள் முழுவதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பலரும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல், இது போன்ற பாடல்கள் மாணவர்களை திசை திருப்பும் வகையில் உள்ளதாக கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
படிக்கும் பொழுதும் தேர்வு எழுதும் பொழுதும் இது போன்ற பாடல்கள் தங்களை திசை திருப்புவதாகவும், காதுக்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் சில மாணவர்களே தெரிவித்திருப்பது மேலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
தென்கொரியாவில் இந்தப் பாடல் தடை செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மாணவர்களின் நலனுக்காக இது போன்ற சில பாடல்கள் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலர், ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கத் தான் முடியும், தங்கள் குழந்தையின் படிப்பு தொடர்பான காரியங்களை கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என மாணவர்களின் பெற்றோர்களைக் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
எது எப்படியிருந்தாலும், சரியான கல்வி அனைவருக்கும் அவசியம் இதுபோல் பொறுப்பற்ற தனமாக நடந்துகொள்ளாமல், முறையாக கல்வியைக் கற்றுக் கொண்டு எதிர்காலத்தைக் காத்துக் கொள்வது அனைத்து மாணவர்களுக்கும் மிக முக்கியம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அதீத தனிமையில் விடாமல் அவர்களது படிப்பு தொடர்பான காரியங்களைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த மாணவனின் செயல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.