ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு இடையே வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை வழங்கும் நிலையில் தினசரி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இச்சேவையானது வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது
சிங்கப்பூரில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அலுவலகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது . இது குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்பொழுது தமிழ் நாட்டில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டு கிடையே விரைவான விமான டிக்கெட்டுகள் பதிவானதை அடுத்து இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை தினசரி விமான சேவைக்கான அட்டவணை போடப்பட்டுள்ளது. மேலும் சேவை எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.