தமிழ் திரையுலகில் அழகிய கண்களோடு வலம்வந்த, வலம்வருகின்ற நடிகைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே கூறலாம். அந்த வகையில் அழகிய தனது கண்களால் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளைகொண்ட நடிகை தான் சிவரஞ்சனி. அவரையும் அவருடைய அழகான கண்களையும் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. “ஹரிதய சாம்ராஜியா” என்ற கன்னட படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
மிஸ்டர். கார்த்திக் என்ற படம் தான் இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். தலைவாசல், தங்கமனசு காரன், சின்ன மாப்பிள்ளை போன்ற பல ஹிட் படங்களில் நடித்துவந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் தமிழில் 1997ம் ஆண்டு வெளியான துர்க்கை அம்மன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமண செய்துகொண்டார்.
இந்நிலையில் சிவரஞ்சனியின் மகள் மேதா தற்போது நடிகையாக களமிறங்கவுள்ளார். ஏற்கனவே அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி என்ற படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேதா தற்போது கதையின் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அவரது புதிய திரைப்படம் குறித்த தற்போது இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.