TamilSaaga
Preparing for Skill Tests: Your Guide to Singapore Employment

இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் …சிங்கப்பூரில் உங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெறுங்கள்!

சிங்கப்பூர் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற விரும்பும் பலர், குறிப்பாக பட்டப்படிப்பு இல்லாதவர்கள் skilled test முக்கியமாகக் கருதுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற நாடுகள், தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் திறமையான தொழிலாளர்களை அதிகம் தேடுகின்றன. பட்டப்படிப்பை விட, குறிப்பிட்ட திறன்கள் மற்றும் அனுபவங்கள் வேலைக்கு முக்கியமாக கருதப்படுகின்றன.

Skilled Test ஒரு நபரின் உண்மையான திறன்களை மதிப்பிடுவதில் மிகவும் நம்பகமானதாக கருதப்படுகின்றன. இது, வேலை அளிப்பவர்களுக்கு, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. Skilled Test-ளை வெற்றிகரமாக முடிப்பவர்கள், குறைந்த காலத்தில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு அதிகம்.

தமிழ்நாட்டில், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள், வெவ்வேறு துறைகளில் திறன் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பயிற்சிகளை வழங்குகின்றன. சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், பயிற்சி நிறுவனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சில நிறுவனங்கள், தரத்தை விட லாபத்தை முக்கியமாகக் கருதுகின்றன. இந்த துறையில் போதுமான கட்டுப்பாடுகள் இல்லாததால், சில நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமானபடி செயல்படுகின்றன.

சிலருக்கு பாஸ்போர்ட் கொடுத்து IPA ரிலீஸ் செய்யவே அதிகமான தொகையை கேட்பதாக கூறப்படுகிறது. கோட்டா கட்டுப்பாட்டால் இன்ஸ்ட்யூட்களும் காசை பிடுங்க ஏகப்பட்ட கெடுப்பிடிகள் காட்டுகிறதாம். பாண்ட் வந்தும் கூட IPA ரிலீஸை செய்யாமல் இளைஞர்களை காலையில் இருந்து மாலை வரை நிற்க வைக்கிறார்களாம்.

ஆனால் இனி இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு தான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது கிடையாது. சிங்கப்பூர் சென்று விட்டு, அங்கு சென்ற பிறகும் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம். இதற்காக வழிகள் இதோ…

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும் முறை :

சிங்கப்பூரில் திறன் பயிற்சி என்பது வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், தொழில் வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். CoreTrade Scheme, Multi-Skilling Scheme, Direct R1 Pathway, Market Based Skills Recognition Framework, ALP போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

பல்வேறு திறன் பயிற்சி திட்டங்கள்

CoreTrade Scheme: இந்த திட்டம், குறிப்பிட்ட தொழில்களில் தேவைப்படும் அடிப்படை திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இது தொழிற் பயிற்சி மற்றும் ஆய்வக பயிற்சிகளை உள்ளடக்கியது.

Multi-Skilling Scheme: இந்த திட்டம், தொழிலாளர்கள் பல திறன்களைப் பெற உதவுகிறது. இது, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

Direct R1 Pathway: இந்த திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யத் தேவையான திறன்களைப் பெற உதவுகிறது.

Market Based Skills Recognition Framework: இந்த திட்டம், தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன் மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வழங்குகிறது.

ALP (Attachment for Learning Programme): இந்த திட்டம், மாணவர்கள் தொழில் துறையில் நேரடி அனுபவத்தைப் பெற உதவுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒரு நாள் பயிற்சி: குறுகிய காலத்தில் தேவையான திறன்களைப் பெற உதவுகிறது.
செய்முறை சோதனை: கற்றுக்கொண்ட திறன்களை நடைமுறையில் பயன்படுத்தும் திறனை மதிப்பிடுகிறது.

சான்றிதழ்: திறமையை நிரூபிக்கும் ஆதாரமாக செயல்படுகிறது.
குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட சம்பளம்: உத்தரவாதமான வருமானத்தை உறுதி செய்கிறது.

நிறுவனங்கள் மூலம் வேலை அளிப்பு: வேலை தேடலின் சுமையை குறைக்கிறது.

டெஸ்ட் அடிக்க விண்ணப்பம் செய்வது எப்படி?

சிங்கப்பூர் அரசு, கட்டுமானத் துறையில் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்குகிறது. சிங்கப்பூரில் மட்டும் 26 அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், கட்டுமானத் துறையில் தேவையான பல்வேறு திறன்களை வழங்குகின்றன. இந்த மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம்.

https://www1.bca.gov.sg/buildsg/manpower/bca-approved-training-and-testing-centres என்ற இணையதளத்தில் சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களின் பட்டியல், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கு நெருக்கமான பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும்.

 

Related posts