சிங்கப்பூர் – சிங்கப்பூர் ஏர்போர்ட் டெர்மினல் சர்வீசஸ் (SATS) நிறுவனம், விமான நிலையம் மற்றும் உணவுச் சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. ஆசியா-பசிபிக் மட்டுமின்றி, உலக அளவிலும் இந்நிறுவனம் தனது வலுவான சேவைகளை வழங்கி வருகிறது.
விமானப் பொருட்களைக் கையாளுவது (Airfreight & Ground Handling): விமானத்தில் வரும் எல்லாப் பொருட்களையும் இறக்கி, ஏற்றி, பத்திரமாகப் பார்த்துக்கொள்வது. அத்துடன், விமான நிலையத்தின் உள்ளே தரையில் நடக்கும் எல்லா வேலைகளையும் செய்வது.
பயணிகள் சேவை (Passenger Services): விமானத்தில் ஏறும் பயணிகளுக்கும், இறங்கும் பயணிகளுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் செய்வது.
உணவுச் சேவைகள் (Food Solutions): விமானப் பயணிகளுக்கான உணவைத் தயாரிப்பது. அத்துடன், வேறு பல நிறுவனங்களுக்கும் மொத்தமாக உணவைத் தயார் செய்து கொடுப்பது.
SATS-ன் சிறப்பு:
- குறிப்பாக, விமானப் பொருட்களைக் கையாளுவதிலும், விமானங்களுக்கான உணவைத் தயாரிப்பதிலும் SATS நிறுவனம் மிகவும் கைதேர்ந்தது (expert).
- இந்த கம்பெனி, 27-க்கும் அதிகமான நாடுகளில் தன் கிளைகளை (network) வைத்துள்ளது. இதன் உதவியுடன், விமானப் பயணங்களுக்கும் வியாபாரத்திற்கும் தேவையான முக்கிய உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
- இந்த நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது:
Job Title: Operations Assistant (Cabin Services)
Job Location: Singapore
Job Profile:
- ஒரு விமானத்திற்குத் தேவையான உணவு, பானங்கள் மற்றும் பிற பொருட்கள் விமான நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்பத் தயாராக உள்ளதா என்பதை உறுதி செய்வது இந்தப் பணியின் முக்கியப் பொறுப்பாகும்.
- விமான நிலையம் கிளம்புவதற்கு முன், பயணிகளின் எண்ணிக்கையை Catering Control பிரிவுடன் இணைந்து சரிபார்த்தல்.
- Galley Loading Plan-க்கு ஏற்ப, உணவுப் பொருட்களை விமானத்தின் உள்ளேயும் வெளியேயும் கவனமாக ஏற்றுதல் மற்றும் இறக்குதல்.
- உணவுப் பொருட்களை ஏற்றிய பிறகு, விமானப் பணியாளர்களுடன் (Cabin Crew) உணவின் இருப்பைச் சரிபார்த்து உறுதி செய்தல்.
- பணியின் முடிவில், இந்த ஆவணங்களை Control Centre-இல் ஒப்படைத்தல்.
- கடைசி நிமிடத்தில் தேவைப்படும் கூடுதல் உணவுகள் அல்லது பொருட்களைப் பெறுவதற்கு ஒருங்கிணைப்பு செய்தல்.
- மேற்பார்வையாளர் அல்லது அதிகாரியால் வழங்கப்படும் பிற பணிகளையும் செய்தல்.
Eligibility:
1. ஆங்கிலத்தில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. கணினியைப் பயன்படுத்துவதில் போதுமான திறமை இருக்க வேண்டும்.
3. Class 3 ஓட்டுநர் உரிமம் இருந்தா உங்களுக்கு ஒரு கூடுதல் சிறப்பு.
4. 25 கிலோ வரை எடையுள்ள பொருட்களைத் தூக்கக்கூடிய அளவு உடல் வலிமை இருக்கணும்.
5. வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேசணும்னு அடிப்படைத் திறன்கள் தேவை.
6. மூன்று ஷிஃப்டுகளிலும் (காலை, மதியம், இரவு) மாறி மாறி வேலை செய்யத் தயாரா இருக்கணும்.
விண்ணப்பிக்கும் முறை:
உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும்போது, பின்வரும் தகவல்களையும் ஆவணங்களையும் தவறாமல் வழங்கவும்:
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரக் குறிப்பு (Updated CV)
- வேலைக்கான விண்ணப்பக் கடிதம் (Cover Letter)
- சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றுகள்