TamilSaaga

எரிசக்தி துறையில் புதிய அத்தியாயம்: சிங்கப்பூரில் உள்ள GE Vernova நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

GE Vernova Inc. என்பது ஆற்றல் உபகரண உற்பத்தி மற்றும் அதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். GE Vernova 2024 ஆம் ஆண்டு ஜெனரல் எலெக்ட்ரிக் (General Electric) நிறுவனத்தின் மின்உற்பத்தி பிரிவுகளான GE Power, GE Renewable Energy, மற்றும் GE Digital ஆகியவற்றின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை உருவாக்கி அதற்கான பராமரிப்பு சேவைகளையும் வழங்கும் சிறந்த நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் Cambridge, Massachusetts-ல் அமைந்துள்ளது.

மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இது 2024 ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டுள்ள GE Vernova Inc. நிறுவனத்தில் தற்பொழுது ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்புகள் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Post Name: Welder

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர், டர்பைன் பிளேடுகள் மற்றும் ஏரோடெரிவேட்டிவ் (Aeroderivative) பொருட்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவார்.

  • TIG வெல்டிங் மூலம் அதிக வெப்பத்தைத் தாங்கும் உலோகங்களைச் சீரமைத்தல்: டர்பைன் பிளேடு போன்ற பாகங்களைப் பழுதுபார்க்கும் போது, அதிக வெப்பத்தைத் தாங்கும் உலோகங்களை TIG வெல்டிங் முறைப்படி சரியான முறையில் பொருத்தி வெல்டிங் செய்ய வேண்டும்.
  • பழுதுபார்க்கும் பணி: டர்பைன் பிளேடுகள் அல்லது ஏரோடெரிவேட்டிவ் பொருட்களில் உள்ள குறைபாடுகளைச் சீரமைத்து (blending repair) பழுதுபார்க்க வேண்டும்.
  • தரம் மற்றும் உற்பத்தி: தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும். பயன்படுத்தப்படும் கருவிகளைப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகளையும், வேகத்தையும் அடைய வேண்டும். பணிபுரியும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அத்துடன் கால அட்டவணைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • பாதுகாப்பு விதிகள்: சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பற்ற செயல்கள் அல்லது நிலைமைகளைக் கண்டால், உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
  • பிற பணிகள்: மேலதிகாரிகள் ஒதுக்கும் மற்ற வேலைகளையும் செய்ய வேண்டும்.

Eligibility:

  • கல்வித் தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பு (Secondary level) அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-இல் NITEC படிப்பு முடித்தவர்கள்.
    அல்லது TIG வெல்டிங் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • பணி அனுபவம்: இந்தப் பணிக்குக் குறைந்தது 3 வருட பணி அனுபவம் (சம்பந்தப்பட்ட துறையில்) அவசியம்.
  • மொழி அறிவு: அடிப்படை ஆங்கிலப் புலமை (பேசவும் படிக்கவும்) இருக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை கிளிக் செய்தால், பணியியர், வேலை செய்ய வேண்டிய இடம் போன்றவற்றுடன், அந்த வேலையின் தன்மை என்ன, என்னென்ன வேலைகள் என்ற முழு விபரம் இருக்கும். அவற்றை முழுமையாக தெளிவாக படித்து பார்த்து, அனைத்து ஓகே என்றால் அதற்கு அருகில் இருக்கும Apply என்பதை கிளிக் செய்யுங்கள்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.

 

எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” என்ற பொத்தானை அழுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.

 

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

சிங்கப்பூரில் முன்னணி MNC நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் வழிகள் மற்றும் முழுமையான தகவல்!

Related posts