TamilSaaga

NOV Inc. சிங்கப்பூர்: டிப்ளோமா பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற NOV Inc. (National Oilwell Varco) நிறுவனம், உலகளாவிய எரிசக்தித் துறைக்கு மிக முக்கியமான சேவைகளை வழங்கி வருகிறது. ஹூஸ்டன், டெக்சாஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், 150 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இந்தத் துறையில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

NOV-ன் முக்கியச் சேவைகள்:

1. உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைத் தோண்டும் மற்றும் உற்பத்தி செய்யும் பணிகளுக்குத் தேவையான அதிநவீன உபகரணங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை NOV வழங்குகிறது.

2. எண்ணெய் வயல்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கான சிறப்புச் சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

3. எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தேவையான உயர்தரப் பொருட்களை ஒருங்கிணைத்து, சரியான நேரத்தில் விநியோகிக்கும் சேவைகளையும் NOV திறம்பட மேற்கொள்கிறது.

NOV, உலகளாவிய எரிசக்தித் துறைக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி, அதைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும், திறமையாகவும் ஆற்றலை உற்பத்தி செய்ய உதவும் வகையில் புதுமைகளைத் தொடர்ந்து உருவாக்கி வரும் இந்நிறுவனம், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் நிலையான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் NOV ஒரு முன்னணி நிறுவனமாகச் செயல்படுகிறது.

Post Name: Maintenance Technician

Job Shift: Day

Locations:

  • 22, Singapore, 619299, SG
  • 29, Singapore, 637429, SG

Eligibility:

  • NTC / NITEC / Diploma in Mechanical Engineering or the equivalent
  • Minimum of 3 – 5 years of hands-on experience in heavy machinery environment.
  • Able to read technical drawings/manual to carry out maintenance work independently.
  • Familiar with Microsoft Office applications
  • Good written & communication skills
  • Able to commit to overtime work

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.08.2025

Applying Link: NOV Applying Link

கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று, உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்த வேலைக்கான பக்கம் திறக்கும். அப்பக்கத்தில், பணியின் தன்மை, வேலை செய்ய வேண்டிய இடம், சம்பளம், தேவையான திறன்கள், செய்ய வேண்டிய வேலைகள் போன்ற அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாகப் படித்து, உங்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Now”  என்ற பட்டனைப் பயன்படுத்தவும்.

2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

பொதுவாக, விண்ணப்பப் பக்கத்தில் உங்களின் சுயவிவரக் கோப்பு (CV/Resume) பதிவேற்ற (upload) செய்ய வேண்டியிருக்கும். அதோடு, உங்களின் பெயர், நாடு, கல்வி, முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் கேட்கப்படும் இடங்களில் நிரப்ப வேண்டும். சில சமயங்களில், விண்ணப்பக் கடிதமும் (cover letter) கேட்கப்படலாம்.

எல்லாவற்றையும் சரியாக நிரப்பிய பிறகு, “Submit” செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் விண்ணப்பம் நேரடியாக அந்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

 

Related posts