சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினர்கள் ஒரு பாஸில் இருந்து மற்றொரு பாஸிற்கு மாறுவது ஒன்றும் புதியது கிடையாது. ஆனால் இப்படி மாறுவதற்கு சில விதிமுறைகள் உண்டு. NTS permit அல்லது work permit வைத்திருக்கும் வெளிநாட்டினர்கள் S Pass மாற விரும்பினால் முதலில் அதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
S Pass பெறுவதற்கான தகுதிகள் :
- வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்பவராக இருக்க வேண்டும்.
- 2025ம் ஆண்டு அமலுக்கு வர உள்ள விதிமுறைகளின் படி, S Pass பெற விரும்புவர்களின் சம்பளம் 3300 சிங்கப்பூர் டாலர்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
- அவர்கள் பெறும் சம்பளம் மற்றும் துறை சார்ந்த வேலை ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்களுக்கு வயது தகுதி இருக்க வேண்டும்.
- மாதாந்திர நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும்.
S Pass மாற விரும்புவோர் கவனிக்க வேண்டியது :
- நீங்கள் S Pass பெறுவதற்கு தகுதியானவரா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- S Pass self-assessment tool பயன்படுத்தி உங்களின் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- தேவைப்பட்டால் உங்களுக்காக உங்களின் முதலாளி S Pass விண்ணப்பம் அளிக்கலாம்.
- உங்களின் முதலாளியால் முன்கூட்டியே உங்களுக்காக S Pass விண்ணப்பம் அளிக்க முடியும்.
- சிங்கப்பூர் அரசு உங்களுக்கு S Pass அளிக்கும் வரை உங்களின் NTS அல்லது work permit செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
- உங்களின் S Pass மாறும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உங்களுக்கு S Pass வழங்கப்படும் முன்பாக உங்களின் முதலாளி உங்களின் NTS அல்லது work permit ஐ ரத்து செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் S Pass பெறுவதற்கு முன்பாக, உங்களின் work permit காலாவதி ஆகி விட்டால் உங்களின் முதலாளி, work permit காலத்தை நீட்டிக்கும் படி கோரிக்கை முன் வைக்க முடியும்.
- அப்படி உங்களின் முதலாளி அளிக்கும் விண்ணப்பம் MOM ஆல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.